பணப்பட்டுவாடா… 5 மாநிலங்களுள் தமிழகம் முதலிடம்!

 

பணப்பட்டுவாடா… 5 மாநிலங்களுள் தமிழகம் முதலிடம்!

தமிழகத்தில் வரும் 6ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கிறது. அதற்கான பணிகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அரசியல் கட்சிகளும் இன்றோடு தங்களது பிரச்சாரத்தை நிறைவு செய்கின்றன. கொரோனா காலக்கட்டத்தில் தேர்தல் நடைபெறுவதால், மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தேர்தல் ஆணையம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக செய்து வருகிறது.

பணப்பட்டுவாடா… 5 மாநிலங்களுள் தமிழகம் முதலிடம்!

இதனிடையே, தேர்தல்களின் போது வழக்கமாக நடைபெறும் பணப்பட்டுவாடா, பரிசுப் பொருட்கள் விநியோகம் உள்ளிட்டவற்றை பறக்கும் படை அதிகாரிகள் கண் கொத்திப் பாம்பாக கண்காணித்து வருகிறார்கள். சில இடங்களில் கோடி கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், வாக்காளர்களுக்கு கொடுக்க வைக்கப்பட்டிருந்த பணம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

பணப்பட்டுவாடா… 5 மாநிலங்களுள் தமிழகம் முதலிடம்!

அப்போது பேசிய அவர், தமிழகம் முழுவதும் 412 கோடி ரூபாய் இதுவரை பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை தொகுதியில் உள்ள ஒரு வீட்டில் 90 லட்சம் ரூபாயும் சைதாப்பேட்டை தொகுதியில் 1.3 கோடி ரூபாயும் பாளையங்கோட்டை தொகுதியில் 12 லட்சம் ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டது என்று தெரிவித்தார்.

தேர்தல் நடக்கும் 5 மாநிலங்களிலும் சேர்த்து 815 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கும் நிலையில், தமிழகத்தில் இருந்து மட்டும் 412 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.