காலாண்டு, அரையாண்டுத் தேர்வு எழுதவில்லை என்றால் ஆப்செண்ட்- தேர்வுத்துறை

 

காலாண்டு, அரையாண்டுத் தேர்வு எழுதவில்லை என்றால் ஆப்செண்ட்- தேர்வுத்துறை

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளனர். காலாண்டு, அரையாண்டு, வருகைப் பதிவு அடிப்படையில் மதிப்பெண் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பல பள்ளிகளில் காலாண்டு, அரையாண்டு முறையாக நடத்தப்படவில்லை. மாணவர்களின் தேர்வு விடைத்தாள்கள் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால், சில பள்ளிகள் அவசர அவசரமாக மாணவர்களை அழைத்து காலாண்டு, அரையாண்டு தேர்வை நடத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

காலாண்டு, அரையாண்டுத் தேர்வு எழுதவில்லை என்றால் ஆப்செண்ட்- தேர்வுத்துறை

இந்நிலையில் 10,11-ம் வகுப்பு மாணவர்கள் காலாண்டு, அரையாண்டு தேர்வை முழுமையாக எழுதவில்லை என்றால் ஆப்சென்ட் என பதிவு செய்ய வேண்டும் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள், முகாம் அலுவலர்களுக்கு, அரசுத் தேர்வுகள் இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.