“எம்ஜிஆர் மதிய உணவு திட்டத்திற்கு ரூ.1725 கோடி ஒதுக்கீடு” : திமுக அரசின் அதிரடி அறிவிப்பு!

 

“எம்ஜிஆர் மதிய உணவு திட்டத்திற்கு ரூ.1725 கோடி ஒதுக்கீடு” : திமுக அரசின் அதிரடி அறிவிப்பு!

கடந்த பிப்ரவரி மாதம் அதிமுக அரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த நிலையில் இன்று புதிதாக பதவியேற்றுள்ள திமுக அரசு முழு நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் பொது பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வரும் நிலையில் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு பல முக்கியத் திட்டங்கள் என அறிவிக்கப்பட்டு வருகிறது.

* 100 கோயில்களில் ரூ.100 கோடி மதிப்பில் திருப்பணிகள் நடைபெறும் ; அர்ச்சகர் பயிற்சி பள்ளிகள் புதுப்பிக்கப்படும்

*எம்.ஜி.ஆர் மதிய உணவு திட்டத்திற்கு ரூ. 1,725 கோடி ஒதுக்கீடு

* 300 சுற்றுலாத்தளங்கள் மேம்படுத்தப்படும்; சுற்றுலாத்துறைக்கு ரூ.187 கோடி ஒதுக்கீடு

* கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தை அமைப்பது குறித்து விரைவில் மத்திய அரசிடம் கலந்து ஆலோசித்து முடிவு செய்யப்படும்

* அரசுப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 76 சதவீதத்திலிருந்து 53 சதவீதமாக குறைந்துள்ளது

“எம்ஜிஆர் மதிய உணவு திட்டத்திற்கு ரூ.1725 கோடி ஒதுக்கீடு” : திமுக அரசின் அதிரடி அறிவிப்பு!

* மின்னாளுகை பட்டியலில் ஏனைய மாநிலங்களை விட தமிழ்நாடு பின் தங்கிவிட்டது

* கனிமங்கள் மூலம் ஏற்படும் வருவாய் இழப்பை தவிர்க்க புதிய கொள்கை உருவாக்கம்; புதிய கனிம வள கொள்கை மூலம் அரசின் வருவாய் பெருமளவு அதிகரிக்கப்படும்

* விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தின்படி பொங்கலுக்கு 1.81 கோடி சேலை, வேட்டிகள் வழங்கப்படும்; பள்ளி சீருடைகளுக்காக ரூ.409 கோடி ஒதுக்கீடு

* கைத்தறி நெசவாளர்கள் பயன்பெறும் வகையில் ஏழைகளுக்கான இலவச வேட்டி, சேலை திட்டத்துக்கு ரூ.490 கோடி ஒதுக்கீடு

* திருநங்கைகள் பயன்பெறும் வகையில் ஓய்வூதிய திட்டத்திற்காக ரூ. 1.50 கோடி ஒதுக்கீடு

“எம்ஜிஆர் மதிய உணவு திட்டத்திற்கு ரூ.1725 கோடி ஒதுக்கீடு” : திமுக அரசின் அதிரடி அறிவிப்பு!

* தூத்துக்குடியில் தொழில்துறை அலகுகளுக்காக 60 எம்.எல்.டி குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

* கொரனாவால் பெற்றோரை இழந்த 5963 குழந்தைகளுக்கு ரூ.95 கோடி நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது; அங்கன்வாடி மையங்களின் தரத்தை உயர்த்த சிறப்பு ஒதுக்கீடாக ரூ.48 கோடி

* 9 மாவட்டங்களில் புதிய சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்படும்.