Home க்ரைம் கொலைக்களமாகிறதா தமிழகம்... ஊரடங்கில் நடந்த 100 கொலைகள்!

கொலைக்களமாகிறதா தமிழகம்… ஊரடங்கில் நடந்த 100 கொலைகள்!

ஊரடங்கில் தளர்வுகள் இருந்தாலும் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியவில்லை. காரணம், கொரோனா வைரஸ் தொற்றின் பயம் ஒவ்வொருவரையும் அச்சுறுத்தி வருகிறது. நேரக்கட்டுபாடுகள், பொருளதார பின்டைவு உள்ளிட்ட பல காரணங்களால் பலர் வேலையை இழந்துள்ளனர். வருமானமின்றி தவிக்கும் அந்தக் குடும்பங்கள் கொரோனா என்று ஒழியும் என ஆவலோடு காத்திருக்கின்றனர். இந்த இக்கட்டான சூழலில் மத்திய மாநில அரசுகள் தங்களால் முடிந்த உதவிகளை மக்களுக்கு செயல்து வருகிறது.

கொலைக்களமாகிறதா தமிழகம்... ஊரடங்கில் நடந்த 100 கொலைகள்!

திசைமாறிய பறவைகளாக ஐடி கம்பெனிகளில் வேலைப்பார்த்தவர்கள் மாற்று தொழிலை செய்துவருகின்றனர். தனியார் கல்லூரிகளில் பாடம் எடுத்த பேராசிரியர்கள் பஜ்ஜி, முருக்கு சுட்டு வாழ்க்கையை நடத்திவருகின்றனர். ஈவ்வன்ட் நிறுவனம் நடத்திவந்தவர்கள், பிளாட்பாரத்தில் தற்காலிக காய்கறி கடைகளை நடத்தி குடும்பத்தை காப்பாற்றி வருகின்றனர். ஆட்டோகள், குட்டி யானைகள் நடமாடும் கடைகளாக மாறிவிட்டன.

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கொரோனா அச்சுறுத்தல் ஒரு புறம் இருந்தாலும் வீட்டுக்குள்ளேயே மக்கள் முடங்கியிருப்பதால் பழைய பகைகள் துளிர்த்து கொலையில் முடிந்துவருகிறது. தலைநகர் சென்னையில் தினமும் ஒரு கொலை என்ற கணக்கில் வழக்குகள் பதிவாகின்றன. சென்னை திருநின்றவூர் காவல் நிலையத்தில் ஒரே வாரத்தில் இரண்டு கொலை சம்பவங்கள் நடந்துள்ளன. அதுவும் சமுதாய பிரச்னைகளைத் தட்டிக்கேட்டதற்கு பரிசாக அவர்கள் உயிரை இழந்துள்ளனர். சென்னை திருநின்றவூர் செல்வராஜ் நகரில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்த மகேந்திரன் இன்று உயிரோடு இல்லை.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவத்துக்கு அவர், கொரோனா ஊரடங்கில் கொலை செய்யப்பட்டுள்ளார். மகேந்திரன் குடியிருக்கும் பகுதியில் ஒரு பெண்ணை இளைஞர்கள் கேலி செய்கின்றனர். அதை மகேந்திரன் தட்டிக் கேட்க மோதல் வெடிக்கிறது. இந்தப்பிரச்னை திருநின்றவூர் காவல் நிலையத்துக்கு செல்கிறது. பின்னர் சம்பந்தப்பட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர். அது முன்விரோதமாக மாறுகிறது. கடந்த வாரத்தில் ஊரடங்கு காரணமாக வீட்டிலிருந்த மகேந்திரனை கொலை செய்துள்ளனர் இளைஞர்கள்.

கொலைக்களமாகிறதா தமிழகம்... ஊரடங்கில் நடந்த 100 கொலைகள்!

இந்தச் சம்பவத்தின் ரத்தம் காய்வதற்குள் அதாவது சோகம் மறைவதற்குள் இன்னொரு சம்பவம் 14-ம் தேதி நடந்துள்ளது. கொசவன்பாளையம் ஆற்றிலிருந்து மண் அள்ளுவதை தடுத்த ஊராட்சி மன்ற தலைவர் பரமகுரு கொலை செய்யப்பட்டுள்ளார். அதுவும் பட்டப்பகலில் பொதுமக்கள் கண் முன்னால் இந்த கொடூர கொலை நடந்துள்ளது. வழக்கறிஞரான பரமகுரு, நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று தலைவராகினார். ஊரடங்கால் நீதிமன்றங்களுக்கு செல்லாத பரமகுரு மழைநீர் வடிகால் பணிகளை பார்வையிட்டுள்ளார். அப்போது அவரின் அருகில் மருமகன் பொன்ராஜ பெருமாள், இன்னும் 2 பேர் இருந்துள்ளனர். அப்போது பைக்கில் வந்த 6 பேர் பரமகுருவை கொடூரமாக கொலை செய்துள்ளது. திமுகவைச் சேர்ந்த பரமகுரு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகரை விட சிவகங்கை காளையார் கோயில் முடுக்கூரணி கிராமத்தைச் சேர்ந்த சந்தியாகுவின் மனைவி ரா.ஜகுமாரி, மருமகள் சினேகா ஆகியோர் நகைக்காக கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த இரட்டை கொலையில் அதிர்ச்சி என்னவென்றால் 7 மாத குழந்தையின் கழுத்தில் கிடந்த நகைகள், காலில் கிடந்த கொலுசு ஆகியவற்றையும் கொள்ளையர்கள் கொள்ளையடித்துள்ளனர். நல்ல வேளை அந்தப் பச்சிளம் குழந்தையை எதுவும் செய்யாமல் விட்டுவிட்டு சென்றுள்ளனர். குழந்தையின் அழுகையால்தான் இந்தக் கொலை வெளியில் தெரிந்தது.

கொலைக்களமாகிறதா தமிழகம்... ஊரடங்கில் நடந்த 100 கொலைகள்!

சந்தியாகு, அவரின் 2 மகன்கள் ஸ்டீபன், ஜேம்ஸ்ராஜ் ஆகிய இருவரும் ராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர். சந்தியாகுவும் முன்னாள் ராணுவ வீரர். நாட்டைக் காப்பாற்றும் இந்தக் குடும்பத்தை சொந்த ஊரில் காப்பாற்ற யாரும் இல்லை என்பது வேதனைக்குரியது. கொலை, கொள்ளையில் ஈடுபட்ட கும்பலை போலீசார், தேடி வருகின்றனர். இந்தக் கொலை, கொள்ளை சம்பவம் நடப்பதற்கு முன் அந்தப்பகுதியில் உள்ள கடையில் திருட்டு நடந்துள்ளது. அதனால் இரண்டு சம்பவங்களிலும் ஈடுபட்டது ஒரே கும்பலா என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரித்துவருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள மெஞ்ஞானபுரத்தை அடுத்துள்ள கல்விளை கிராமத்தில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்தில் சிறுமியின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த இளைஞர்களை போலீசார் கைத செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலும் சிறுமி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் மார்ச் மாதம் தொடங்கிய ஊரடங்கு முதல் இதுவரை 100-க்கும் மேற்பட்ட கொலை சம்பவங்கள் நடந்திருப்பதாக மாநில குற்ற ஆவண காப்ப புள்ளி விவரங்கள் சொல்கின்றன.

கொலைக்களமாகிறதா தமிழகம்... ஊரடங்கில் நடந்த 100 கொலைகள்!

கொரோனா உயிரிழப்பைவிட இந்த கொடூரக் கொலைகள் மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. காவல்துறை இரும்பு கரம் கொண்டு ஒடுக்கினால் மட்டுமே குற்றச் செயல்கள் குறையும்.
இதுகுறித்து மாநில குற்றப்பிரிவு ஆவண காப்பக போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டதற்கு, குற்றச் செயல்கள் குறித்த தகவல்கள் ஒப்பீடு செய்யப்படும். அந்தப் பட்டியல் அடிப்படையில் ஆலோசனை நடத்தப்படும். இந்தச் சூழலில் கடந்த ஆண்டை விட மார்ச், ஏப்ரல், மே, ஜுன் ஆகிய மாதங்களில் குற்றசம்பவங்கள் அதிகரித்துள்ளது உண்மைதான். இதற்கு ஊரடங்கு முக்கிய காரணம். கொள்ளை, திருட்டு, வழிப்பறி வழக்குகளோடு கொலை வழக்குகளும் அதிகரித்துள்ளன. குடும்ப வன்முறைகள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களும் அதிகரித்துள்ளன. முன்பெல்லாம் தமிழகம் முழுவதும் சராசரியாக 25 கொலை வழக்குள் பதிவாகினால் இந்த ஊரடங்கில் அது இரண்டு மடங்காகியுள்ளது. கொலைக்கான காரணம், கைது செய்தவர்களின் பின்னணி ஆகியவற்றை ஆலோசித்துவருகிறோம். ஏறத்தாழ இந்த 4 மாதங்களில் கொலை வழக்குகள் மட்டுமே 100ஐ தாண்டியுள்ளது என்றனர்.

-எஸ்.செல்வம்

கொலைக்களமாகிறதா தமிழகம்... ஊரடங்கில் நடந்த 100 கொலைகள்!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

டிஎன்பிஎல்- நெல்லை Vs திருப்பூர்! 3 விக்கெட் வித்தியாசத்தில் திருப்பூர் வெற்றி

நடப்பு டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 10வது போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் மற்றும் ஐ ட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகளுக்கிடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.

ஆன்மீக குருவுக்கு சுற்றுச்சூழல் மீது ஏன் இவ்வளவு அக்கறை?- சத்குரு அதிரடி

ஈஷா சார்பில் 'உயிர் நோக்கம்' என்ற 3 நாள் யோகா நிகழ்ச்சி ஜூலை 23 முதல் 25 ஆம் தேதி வரை ஆன்லைனில் இலவசமாக நடைபெற்றது இதில் தமிழ்நாடு முழுவதும்...

17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய அதிமுக நிர்வாகி கைது

சேலம் அருகே 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய அதிமுக வார்டு கவுன்சிலர் போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்யபட்டுள்ளார்.
- Advertisment -
TopTamilNews