#BREAKING: தமிழகத்தில் ஏப்.6ம் தேதி சட்டமன்றத் தேர்தல்!

 

#BREAKING: தமிழகத்தில் ஏப்.6ம் தேதி சட்டமன்றத் தேர்தல்!

தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி தமிழக மக்கள் வழி மேல் விழி வைத்துக் காத்துக் கிடக்கிறார்கள். அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் மும்முரமாக களமிறங்கியுள்ளன. அதே சமயம், தமிழக தேர்தல் ஆணையமும் வாக்குச்சாவடிகள், வாக்கு இயந்திரங்கள், வாக்கு எண்ணும் மையங்கள் உள்ளிட்ட அனைத்தையும் தயார் செய்து வருகிறது.

#BREAKING: தமிழகத்தில் ஏப்.6ம் தேதி சட்டமன்றத் தேர்தல்!

தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்க இரண்டு கட்டமாக தமிழகம் வந்த இந்திய தலைமை தேர்தல் ஆணையக் குழு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனும் தமிழக தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி விட்டுச் சென்றனர். எத்தனை கட்டமாக தேர்தல் நடத்துவது? தபால் வாக்கு முறையை பின்பற்றுவது உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து அக்கூட்டங்களில் விவாதிக்கப்பட்டது.

#BREAKING: தமிழகத்தில் ஏப்.6ம் தேதி சட்டமன்றத் தேர்தல்!

இந்த நிலையில், தமிழகமே எதிர்பார்த்துக் காத்துக் கிடந்த சட்டமன்றத் தேர்தல் தேதியை டெல்லியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தார். தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என்றும் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

மார்ச் 12ல் ஆரம்பமாகும் மனு தாக்கல், மார்ச் 19ல் நிறைவடைகிறது. மார்ச் 20ல் வேட்புமனு பரிசீலனை தொடங்கி, வேட்புமனு திரும்பப்பெற மார்ச் 22 வரை அவகாசம் அளிக்கப்படுகிறது. மேலும், ஒரே கட்டமாக 234 தொகுதிகளிலும் தேர்தல் நடத்தப்பட்டு வாக்கு எண்ணிக்கை மே 2ம் தேதி நடைபெறவிருக்கிறது. தமிழகத்தில் 3.18 கோடி பெண்கள், 3.08 கோடி ஆண்கள், 7,200 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தமாக 6.26 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.