உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் 6-வது முறையாக தொடர்ந்து தமிழகம் முதலிடம்!

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் 6-வது முறையாக தொடர்ந்து தமிழகம் முதலிடம்!

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தொடர்ந்து 6 ஆவது முறையாக முதலிடம் பிடித்துள்ள தமிழக அரசுக்கு இன்று விருது வழங்கப்படுகிறது.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் 6-வது முறையாக தொடர்ந்து தமிழகம் முதலிடம்!

பொதுவாக மூளைச்சாவு அடைந்தவர்கள் உடல் அவரது உறவுகளிடம் ஒப்படைக்கப்படும். ஆனால் கடந்தசில ஆண்டுகளாக மக்களிடம் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு காரணமாக மூளை சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகளை தானம் செய்வதின் மூலம் 8 நபர்களுக்கு வாழ்வளிக்க முடிகிறது/ தமிழகத்தில் இதுவரை சுமார், 1382 கொடையாளர்களிடமிருந்து 8,163 உறுப்புகள் பெறப்பட்டுள்ளது. இந்த உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் தமிழக அரசு கடந்த 5 முறை மத்திய அரசிடமிருந்து விருதை பெற்று வருகிறது.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் 6-வது முறையாக தொடர்ந்து தமிழகம் முதலிடம்!

இந்நிலையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் தொடர்ந்து 6-வது முறையாக முதலிடத்தை பிடித்துள்ளது. இதற்கான விருதை தமிழக சுகாதாரத்துறைக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் இன்று விருது வழங்குகிறார். புதுக்கோட்டையில் இருந்து காணொலி மூலம் அமைச்சர் விஜயபாஸ்கர் விருதை பெறுகிறார்.