“கொரோனா 9.56 மடங்கும், இறப்புகள் 5.75 மடங்கும் அதிகரிப்பு” – பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை!!

 

“கொரோனா  9.56 மடங்கும், இறப்புகள் 5.75 மடங்கும் அதிகரிப்பு” – பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை!!

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று அதிகரித்து வருவதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

“கொரோனா  9.56 மடங்கும், இறப்புகள் 5.75 மடங்கும் அதிகரிப்பு” – பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை!!

இந்தியாவில் கொரோனா மீண்டும் தலைதூக்கும் நிலையில் நாடு முழுவதும் ஒரே நாளில் 1,45,384 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியா முழுவதும் 794 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ள நிலையில் இந்தியாவின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,32,05,926 ஆக உயர்ந்துள்ளது.தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு வேகம் எடுத்து வரும் நிலையில், நேற்று ஒரே நாளில் 5441 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அத்துடன் 23 பேர் உயிரிழந்தனர்.இந்த சூழலில் கொரோனா தடுப்பூசி 2 டோஸ் போட்டுக்கொள்வது மிக மிக அவசியம் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். வீடு தேடி வரும் மாநகராட்சி பணியாளர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அறிகுறிகள் இருந்தால் பொதுமக்கள் முகாம்களில் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தனது ட்விட்டர் பக்கத்தில், “நேற்று (09-04-2021) ஒரே நாளில் 5,441 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்திற்குள் (09-03-2021 முதல் 09-04-2021) புதிய தொற்றுகள் 9.56 மடங்கும், நோயாளிகள் எண்ணிக்கை 8.26 மடங்கும் மற்றும் இறப்புகள் 5.75 மடங்கும் அதிகரித்துள்ளது .

எனவே,எச்சரிக்கையாக இருக்கவும் !!முக கவசம் அணிவோம்!! சமூக இடைவெளியினை கடைபிடிப்போம்!! கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வோம் !! ” என்று பதிவிட்டுள்ளது.