தமிழகத்தில் நீட் தேர்வு எழுத விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவு!

 

தமிழகத்தில் நீட் தேர்வு எழுத விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவு!

மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு 2017 ஆம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. ஆனால் தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற அழுத்தம் கொடுக்கப்படும் என்று அ.தி.மு.க அறிவித்தது. நான்கு ஆண்டுகளாக அழுத்தம் கொடுத்து வருவதாக அரசு தரப்பிலிருந்து அறிவிப்பு மட்டுமே வருகிறது. ஆனால், விலக்கு மட்டும் வரவில்லை. இதனால், நீட் தேர்வுதான் நமக்கு விதிக்கப்பட்ட ஒன்று என்ற முடிவுக்கு வந்துவிட்ட மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ளத் தயாராகி வருகின்றனர். தமிழக மாணவர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையங்களை ஒதுக்கியதாலும் தேர்வு மையங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாலும் மாணவர்களிடையே நீட் தேர்வை எதிர்கொள்வது குறித்த விரக்தி ஏற்பட்டது.

தமிழகத்தில் நீட் தேர்வு எழுத விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவு!

இந்நிலையில் தமிழகத்தில் இருந்து நீட் தேர்வு எழுத விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்திருப்பது தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டைவிட 13% பேர் குறைவாக நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளான்ர். அதேவேளையில் பீகாரில் 28% பேரும், உத்தர பிரதேசத்தில் இருந்து 16% பேரும் கூடுதலாக நீட் தேர்வுக்கு இந்த ஆண்டு விண்ணப்பித்துள்ளனர்.