தினசரி புதிய நோயாளிகள் அதிகரிப்பதில் தமிழ்நாடு 6-ம் இடத்தில் – இந்தியாவில் கொரோனா

தினசரி புதிய நோயாளிகள் அதிகரிப்பதில் தமிழ்நாடு 6-ம் இடத்தில் – இந்தியாவில் கொரோனா

கொரோனா வைரஸ் பரவலும் பாதிப்பும் அதிகம் உள்ள நாடாக இந்தியா உள்ளது. ஆயினும், கடந்த சில நாட்களாக கொரோனா பரவலின் எண்ணிக்கையில் சற்று தளர்வு ஏற்பட்டிருக்கிறது.

தினசரி புதிய நோயாளிகள் அதிகரிப்பதில் தமிழ்நாடு 6-ம் இடத்தில் – இந்தியாவில் கொரோனா

இந்தியாவில் சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை இன்றைக்கு 5,33,787 ஆக இருக்கிறது. மொத்த குணம் அடைந்தோர் 76.5 லட்சத்துக்கும் அதிகமாக உள்ள (76,56,478) நிலையில் சிகிச்சை பெறுவோரின் எணிக்கைக்கும், குணம் அடைவோரின் எண்ணிக்கைக்கும் இடையேயான வித்தியாசம் அதிகரித்திருக்கிறது. தேசிய அளவில் குணம் அடைவோர் விகிதம் 92% (92.09%)ஆக உள்ளது.

தினசரி புதிய நோயாளிகள் அதிகரிப்பதில் தமிழ்நாடு 6-ம் இடத்தில் – இந்தியாவில் கொரோனா

கடந்த 24 மணி நேரத்தில் 53,357 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி இருக்கின்றனர். புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 46,253 ஆக இருக்கிறது. இன்றைக்கு ஒட்டுமொத்த பரிசோதனை 11.3 கோடிக்கு நெருக்கமாக இருக்கிறது. (11,29,98,959). கடந்த 24 மணி நேரத்தில் 12,09,609 பேருக்கு பரிசோதனை நடைபெற்றுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 514 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்தியாவின் உயிரிழப்பு விகிதம் 1.49% என்ற அளவில் தொடர்ந்து நீடிக்கிறது.

தினசரி புதிய நோயாளிகள் அதிகரிப்பதில் தமிழ்நாடு 6-ம் இடத்தில் – இந்தியாவில் கொரோனா

இந்திய மாநிலங்களில் தினசரி குணமடையும் மாநிலங்களில் பட்டியலில் தமிழ்நாடு ஏழாம் இடத்திலும், புதிய நோயாளிகள் அதிகரிப்பதில் ஆறாம் இடத்திலும், மரணிப்போர் எண்ணிக்கையில் ஆறாம் இடத்திலும் உள்ளது.