கொரோனா தடுப்பூசிகள் வீணடிக்கப்பட்டதில் தமிழகத்திற்கு 3வது இடம்!

 

கொரோனா தடுப்பூசிகள் வீணடிக்கப்பட்டதில் தமிழகத்திற்கு 3வது இடம்!

கொரோனா தடுப்பூசிகள் வீணடிக்கப்பட்டதில் தமிழகம் (15.5%) மூன்றாவது இடத்தில் உள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பூசிகள் வீணடிக்கப்பட்டதில் தமிழகத்திற்கு 3வது இடம்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மத்திய அரசு தமிழகத்திற்கு 91.34 லட்சம் தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் 70.12 லட்சம் பயன்படுத்தப்பட்டதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தை விட நோய் தொற்று பாதிப்பு குறைவாக உள்ள ராஜஸ்தான் மாநிலத்திற்கு 1.61 கோடி, மத்திய பிரதேசத்திற்கு 1.71 கோடி, குஜராத்திற்கு 1.62 கோடி என தடுப்பூசி அளிக்கப்பட்டுள்ளது என்றும் இதனால் தமிழகத்திற்கு தடுப்பூசி ஒதுக்கீடு எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும் திமுக எம்பி டி ஆர் பாலு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கொரோனா தடுப்பூசிகள் வீணடிக்கப்பட்டதில் தமிழகத்திற்கு 3வது இடம்!

அதேபோல் தமிழகத்தில் தற்போது 18 முதல் 44 வயது உடையவர்களுக்கு தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 3.75 கோடி நபர்கள் இதன் மூலம் பயன் பெறுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்திற்கு 10 கோடி தடுப்பூசிகள் தேவைப்படுகிறது என்று தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கொரோனா தடுப்பூசி வீணடிக்கப்படுவதில் தமிழகம் 15.5% உடன் மூன்றாவது இடத்தில் உள்ளது என்று மத்திய அரசு கூறியுள்ளது. ஜார்கண்ட் 37.3%, சத்தீஷ்கர் மாநிலம் 30.2 சதவீதம் என முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ள நிலையில் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது.