நாளையுடன் ஓயும் பரப்புரை : தீவிரம் காட்டும் அரசியல் கட்சிகள்!!

 

நாளையுடன் ஓயும் பரப்புரை : தீவிரம் காட்டும் அரசியல் கட்சிகள்!!

தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக கடந்த 20 நாட்களாக அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரை மேற்கொண்டு வந்த நிலையில் பிரச்சாரம் நாளையுடன் முடிவடைகிறது.

நாளையுடன் ஓயும் பரப்புரை : தீவிரம் காட்டும் அரசியல் கட்சிகள்!!

சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது தேர்தலுக்காக தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமாக இயங்கி வருகின்றன. திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட பல கட்சிகள் இணைந்துள்ளன. அதிமுவில் பாஜக , பாமக, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இணைந்துள்ளது. கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு, வேட்பாளர் என அனைத்தும் அறிவிக்கப்பட்ட நிலையில் கிட்டத்தட்ட 20 நாட்களுக்கு மேலாக அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் இந்த முறை முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி, முக ஸ்டாலின், சீமான், டிடிவி தினகரன், கமல் ஹாசன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

நாளையுடன் ஓயும் பரப்புரை : தீவிரம் காட்டும் அரசியல் கட்சிகள்!!

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் நாளை இரவு 7 மணியுடன் பரப்புரை முடிவடைகிறது. இதனால் அனைத்து கட்சிகளும் பரப்புரையை தீவிரப்படுத்தியுள்ளனர்.முன்னதாக நாளை 5 மணியுடன் பரப்புரை நிறைவுபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. பின்னர் அரசியல் கட்சிகளின் கோரிக்கையை ஏற்று 7 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாகு அறிவித்துள்ளார்.