பாஜக வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி மறுப்பு!

 

பாஜக வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி மறுப்பு!

பாஜகவின் வேல் யாத்திரைக்கு அனுமதி தர முடியாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது .

கொரோனா 2ஆவது மற்றும் 3ஆவது அலைக்கான அச்சுறுத்தல் உள்ளதால் வேல் யாத்திரைக்கு அனுமதி தர முடியாது என்று தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. பாஜகவின் வேல் யாத்திரைக்கு தடை கோரிய வழக்கில் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் வாதிட்டுள்ளார். அத்துடன் நாளை வேல் யாத்திரை தொடங்க திட்டமிட்ட நிலையில் காவல்துறை அனுமதி அளிக்கவில்லை எனவும் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதைப்போல் அனுமதி கேட்டு திருவள்ளூரில் அளிக்கப்பட்ட மனுவில் எத்தனை பேர் பங்கேற்பர் என குறிப்பிடப் படவில்லை எனவும் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

பாஜக வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி மறுப்பு!

தமிழக பாஜக மாநில தலைவர் எல்.முருகன், நவம்பர் 6 முதல் டிசம்பர் 6-ம் தேதி வரை வேல் யாத்திரை நடத்த திட்டமிட்டார். அதன்படி திருத்தணியில் 6ஆம் தேதி தொடங்கும் வேல் யாத்திரை, 9ஆம் தேதி ரத்தினகிரி, 20ஆம் தேதி சென்னிமலை, 22ஆம் தேதி மருதமலை, 23ஆம் தேதி பழனி, 25ஆம் தேதி சுவாமிமலை, டிசம்பர் 1ஆம் தேதி திருப்பரங்குன்றம், 2ஆம் தேதி பழமுதிர்ச்சோலை என சென்று இறுதியாக 6ஆம் தேதி திருச்செந்தூரில் முடிகிறது. அங்கு பாஜக பொதுக்கூட்டமும் நடைபெற இருந்தது .

பாஜக வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி மறுப்பு!

ஆனால் பாஜகவின் வேல் யாத்திரைக்கு தடைகோரி செந்தில்குமார் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அதில் கொரோனா பரவல் காரணமாக தான் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்குதடை விதிக்கப்பட்டது. அப்படி இருக்கையில் வேல் யாத்திரைக்கு அனுமதி அளித்தால் தொற்று வேகமாக பரவும். அத்துடன் வேல் யாத்திரை முடிக்க திட்டமிட்டுள்ள டிச. 6 ஆம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினம். இதனால் சட்டம் -ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என கூறி பாஜகவின் வேல் யாத்திரைக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.