தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம்; தமிழக அரசு கேவியட் மனு தாக்கல்!

 

தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம்; தமிழக அரசு கேவியட் மனு தாக்கல்!

கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்வது தொடர்பான விவகாரத்தில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் கொண்டு வரப்பட்டது. மாநிலம் முழுவதும் இந்த திட்டம் அமலாகியுள்ளது. இதற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் மனு தாக்கல் செய்தார். பெரும்பாலான கோவில்கள் ஆகம விதிகளின்படி அமைக்கப்பட்டிருப்பதால் சமஸ்கிருதத்தில் மந்திரங்களை உச்சரிப்பது பழங்கால பாரம்பரியம். சமஸ்கிருதத்தில் அர்ச்சனை செய்யாவிட்டால் மந்திரங்களின் புனிதத்தன்மை அழிந்துவிடும் என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம்; தமிழக அரசு கேவியட் மனு தாக்கல்!

பக்தர்கள் தங்கள் விருப்பப்படி தமிழிலோ அல்லது சமஸ்கிருதத்திலோ அர்ச்சனை செய்வது அவரவர் விருப்பம் என்று நீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய தீர்ப்பை குறிப்பிட்ட நீதிபதிகள், தீர்ப்புக்கு முரணான முடிவை எடுக்க முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இந்த நிலையில் கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் விவகாரங்கள் குறித்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. மனுவில், அரசு தரப்பு விளக்கத்தை கேட்காமல் எந்த ஒரு உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.