வோட்டர் ஐடி இல்லையா? கவலையை விடுங்க; இதை கொண்டு போங்க!!

 

வோட்டர் ஐடி இல்லையா? கவலையை விடுங்க;  இதை கொண்டு போங்க!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனே வேட்பு மனுத்தாக்கல், இறுதி வேட்பாளர் பட்டியல், அத்துடன் கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு என அடுத்ததடுத்த பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றன. இதையடுத்து நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. 234 தொகுதிகளிலும் 3,998 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த முறை தமிழகத்தில் 6 கோடியே 2லட்சத்து 67 ஆயிரத்து 446 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

வோட்டர் ஐடி இல்லையா? கவலையை விடுங்க;  இதை கொண்டு போங்க!!

சட்டமன்ற தேர்தலில் இம்முறை அதிமுக, திமுக, அமமுக-தேமுதிக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழர் என ஐந்து முனை போட்டி நிலவுகிறது. இதில் முதல்வர் வேட்பாளர்களாக எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின், டிடிவி.தினகரன், கமல்ஹாசன் , சீமான் ஆகியோர் களத்தில் உள்ளனர். வழக்கத்திற்கு மாறாக தமிழகத்தின் கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இருமுக்கிய ஆளுமைகள் இல்லாத முதல் சட்டமன்ற தேர்தல் என்பதால் , டெல்லியிலிருந்து பிரதமர் மோடி, அமித் ஷா, ராகுல் காந்தி உள்ளிட்ட பலர் தேர்தல் களத்தில் தீவிர பரப்புரையில் ஈடுபட்டனர்.

வோட்டர் ஐடி இல்லையா? கவலையை விடுங்க;  இதை கொண்டு போங்க!!

தமிழக சட்டமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை தேர்தல் ஆணையம் எதிர்நோக்கியுள்ளது. அதேசமயம், வாக்காளர்கள் வாக்குச்சாவடியில் அடையாள அட்டையாக வாக்காளர் அட்டையை தவிர்த்து வேறு எந்தெந்த ஆவணங்களை கொண்டு செல்லலாம் என இந்திய தேர்தல் ஆணையம் 11 ஆவணங்களை பரிந்துரைத்துள்ளது. அவை பின்வருமாறு:-

*ஆதாா் அட்டை

*மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அட்டை

*வங்கி, அஞ்சலக கணக்குப் புத்தகங்கள் (புகைப்படத்துடன் கூடியது )

*தொழிலாளா் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீடு (ஸ்மாா்ட் காா்டு வடிவில் )

*ஓட்டுநா் உரிமம்

வோட்டர் ஐடி இல்லையா? கவலையை விடுங்க;  இதை கொண்டு போங்க!!

*பான் கார்டு

*தேசிய மக்கள்தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மாா்ட் காா்டு

*பாஸ்போர்ட்

வோட்டர் ஐடி இல்லையா? கவலையை விடுங்க;  இதை கொண்டு போங்க!!

*ஓய்வூதிய ஆவணம் ( புகைப்படத்துடன் கூடியது)

*மத்திய மற்றும் மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்கள், வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களால் தொழிலாளா்களுக்கு வழங்கப்பட்ட பணி அடையாள அட்டை( புகைப்படத்துடன் கூடியது)

*எம்.பி., எம்எல்ஏக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை