மோடியுடன் தமிழக பாஜக எம்எல்ஏக்கள் இன்று சந்திப்பு!

 

மோடியுடன் தமிழக பாஜக எம்எல்ஏக்கள் இன்று சந்திப்பு!

டெல்லியில் பிரதமர் மோடியை இன்று தமிழக பாஜக எம்எல்ஏக்கள் சந்தித்து பேசுகின்றனர்.

மோடியுடன் தமிழக பாஜக எம்எல்ஏக்கள் இன்று சந்திப்பு!

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது. தமிழகத்தில் பாஜகவை காலூன்ற விட கூடாது என்று திமுக அரும்பாடுபட்ட போதிலும் பாஜகவுக்கு அதிமுக 20 இடங்கள் ஒதுக்கீடு செய்தது. இந்த தேர்தலில் நயினார் நாகேந்திரன், வானதி ஸ்ரீனிவாசன், காந்தி, சரஸ்வதி ஆகிய 4 பேர் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குள் நுழைந்துள்ளனர். இதன் மூலம் கடந்த 20 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜகவின் கனவு நிறைவேறியுள்ளது. இருப்பினும் கட்சியின் தலைவரான எல்.முருகன் தான் போட்டியிட்ட தாராபுரம் தொகுதியில் மண்ணை கவ்வினார்.

மோடியுடன் தமிழக பாஜக எம்எல்ஏக்கள் இன்று சந்திப்பு!

இந்நிலையில் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை இன்று தமிழக பாரதிய ஜனதா கட்சி எம்எல்ஏக்கள் சந்தித்து பேசுகின்றனர். வானதி சீனிவாசன் உள்பட எம்எல்ஏக்கள் உடன் பாஜக மாநில தலைவர் எல். முருகனும் சந்தித்து பேச உள்ளார்.தேர்தல் வெற்றிக்கு பிறகு முதல்முறையாக பாஜக எம்எல்ஏக்கள் டெல்லி பயணம் மேற்கொள்கின்றனர். தேர்தலில் வெற்றிபெற்றதற்கு மோடியிடம் வாழ்த்து பெறும் பாஜக எம்எல்ஏக்கள், தமிழக அரசியல் நிலவரம், மத்திய அரசை எதிர்த்து சட்டமன்றத்தில் திமுக கொண்டு வரும் தீர்மானங்களுக்கு பாஜக நிலைப்பாடு என்பது குறித்து ஆலோசனை நடத்தப்படும் என்று தெரிகிறது.