முதல்வர் பழனிசாமிக்கு தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் நேரில் ஆறுதல்!

 

முதல்வர் பழனிசாமிக்கு தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் நேரில் ஆறுதல்!

முதல்வர் பழனிசாமியின் தாயார் மறைவையொட்டி, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

முதல்வர் பழனிசாமிக்கு தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் நேரில் ஆறுதல்!

முதல்வரை சந்தித்து தாயாரின் மறைவுக்கு தமிழக பாஜக தலைவர் எல். முருகன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் பழனிசாமி இல்லத்தில் வைக்கப்பட்ட திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் பாஜக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

முதல்வர் பழனிசாமிக்கு தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் நேரில் ஆறுதல்!

தாயாரின் மறைவையொட்டி கடந்த ஒருவார காலமாக சேலம் இல்லத்தில் முதல்வர் பழனிசாமி இருந்தார். நேற்றிரவு சென்னை திரும்பிய அவரை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அவருடன் திமுக பொதுசெயலாளர் துரைமுருகன், துணை பொதுச்செயலாளர் பொன்முடி ஆகியோர் உடனிருந்தனர்.

முதல்வர் பழனிசாமிக்கு தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் நேரில் ஆறுதல்!

கடந்த வாரம் முதல்வரின் 90வயது தாயார் தவுசாயம்மாள் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரின் இறுதி சடங்கு சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் நடைபெற்றது. இதில் அதிமுக அமைச்சர்கள் பலர் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.