அமித்ஷாவை சந்தித்த தமிழக பாஜக நிர்வாகிகள்!

 

அமித்ஷாவை சந்தித்த தமிழக பாஜக நிர்வாகிகள்!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறவிருக்கிறது. தேர்தலை எதிர்நோக்கி அரசியல் கட்சிகள் தீவிரமாக களப்பணியாற்றி வரும் நிலையில், தமிழகத்தில் காலூன்ற திட்டமிட்டிருக்கும் தேசிய கட்சியான பாஜக ஆளும் கட்சியான அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருக்கிறது. அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 22 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அண்மையில் கோவை வந்த பிரதமர் மோடி, அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி விட்டுச் சென்றார்.

அமித்ஷாவை சந்தித்த தமிழக பாஜக நிர்வாகிகள்!

இதைத் தொடர்ந்து, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்ட அவர், கிண்டியில் இருக்கும் ஓட்டலில் தங்கினார். இந்த நிலையில், இன்று காலை அமித்ஷாவை தமிழக பாஜக நிர்வாகிகள் சந்தித்து பேசினர். பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகனுடன் பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் கிஷன் ரெட்டி, வி.கே.சிங் ஆகியோர் அமித்ஷாவுடன் கலந்துரையாடினர்.

அமித்ஷாவை சந்தித்த தமிழக பாஜக நிர்வாகிகள்!

பாஜக நிர்வாகிகளுடனான ஆலோசனைக்கு பின் ஹெலிகாப்டரில் அமித்ஷா, காரைக்காலுக்கு செல்கிறார். அங்கு நடைபெறவிருக்கும் பாஜக உயர்மட்டக்குழு கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் மாலை 3 மணிக்கு விழுப்புரம் வரும் அமித்ஷா, பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். அமித்ஷாவின் வருகை அரசியல் ரீதியாக கவனத்தை பெற்றுள்ளது.