‘தமிழக சட்டமன்றத் தேர்தல்’ தேதி வரும் 28ம் தேதி அறிவிக்கப்படுகிறதா?

 

‘தமிழக சட்டமன்றத் தேர்தல்’ தேதி வரும் 28ம் தேதி அறிவிக்கப்படுகிறதா?

சட்டமன்ற தேர்தல் குறித்து வரும் 28ஆம் தேதி அறிவிக்கப்படும் என தகவல் கிடைத்திருப்பதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் நிலையில், தேர்தலுக்கான தேதி அறிவிப்பை எதிர்நோக்கி வழிமேல் விழிவைத்து காத்துக் கிடக்கின்றன. அண்மையில் தமிழகம் வந்த இந்திய தலைமை தேர்தல் ஆணைய உயர்மட்டக் குழு, தமிழக தலைமை தேர்தல் அதிகாரியுடன் ஆலோசனை நடத்தி பீகார் தேர்தல் முறை தமிழகத்திலும் கடைபிடிக்கப்படும் என அறிவித்தது.

‘தமிழக சட்டமன்றத் தேர்தல்’ தேதி வரும் 28ம் தேதி அறிவிக்கப்படுகிறதா?

இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கவே, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா வரும் 10ம் தேதி தேர்தல் குறித்து ஆலோசிக்க தமிழகம் வரவிருக்கிறார். அதிகாரிகளுடன் அவர் நடத்தவிருக்கும் ஆலோசனையின் முடிவில், தேர்தலுக்கான தேதி உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், வரும் 28ம் தேதி தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

‘தமிழக சட்டமன்றத் தேர்தல்’ தேதி வரும் 28ம் தேதி அறிவிக்கப்படுகிறதா?

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் திமுக கூட்டணியில் யாரை சேர்ப்பது நீக்குவது என்பது பற்றி ஸ்டாலின் முடிவெடுப்பார் என்றும் கூறியுள்ளார்.