நீட் தேர்வில் முன்னேறிய தமிழகம் : மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணம்

நீட் தேர்வில் முன்னேறிய தமிழகம் : மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணம்

நாட்டிலேயே நீட் தேர்வில் அதிக தேர்ச்சி பெற்ற மாணவர்களின் பட்டியலில் தமிழகம் 5 ஆவது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வை எழுதிய 99,610 மாணவர்களில் 57,215 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வின் தேர்ச்சி சதவீதம் 48.57 சதவீதமாக இருந்தது. அதேபோல தேசிய அளவில் கடந்த ஆண்டு தமிழகம் 23 ஆவது இடத்தை பெற்றிருந்தது.

நீட் தேர்வில் முன்னேறிய தமிழகம் : மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணம்

இந்நிலையில் தமிழகத்தில் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் நீட் தேர்வு எழுதியவர்களில் 8.87% பேர் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டு 57.44 % பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்த ஆண்டு தமிழக அரசின் ’அரசு நீட் தேர்வு பயிற்சி மையங்கள்’ உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளால், அதிக தேர்ச்சி பட்டியலில் 5 ஆவது இடத்துக்கு தமிழகம் முன்னேறி இருக்கிறது.

நீட் தேர்வில் முன்னேறிய தமிழகம் : மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணம்

இந்த ஆண்டு அரசு பள்ளி மற்றும் தமிழ்வழிக் கல்வியில் பயின்ற மாணவர்கள் அதிக அளவில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழக அரசின் இச்செயலானது மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக இருக்கிறது.

இளங்கலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வில் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீஜன் மாநில அளவில் முதலிடமும், தேசிய அளவில் 8வது இடமும் பிடித்துள்ளார்.

நீட் தேர்வில் முன்னேறிய தமிழகம் : மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணம்

மேலும் தேசிய அளவில் தேர்ச்சி பெற்ற ஓபிசி பிரிவினர் பட்டியலில் இவர் முதல் இடம் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அளவில் அரசு பள்ளிகளில் நீட் தேர்வில் முதலிடம் பெற்றுள்ளார் தமிழகத்தைச் சேர்ந்த ஜீவித்குமார். இவரது மதிப்பெண்கள் 720 க்கு 664. இவர் பெரியகுளம் அருகே சில்வார்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை ஆடு மேய்க்கும் எளிய குடுமப்த்தை சார்ந்த கூலித் தொழிலாளி என்பதும் குறிப்பிடத்தக்கது.

நீட் தேர்வில் முன்னேறிய தமிழகம் : மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணம்

அதேபோல நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மோஹனபிரபா 720க்கு 705 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். தேசிய அளிவில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவிகள் பட்டியலில் இவர் 14வது இடத்தையும், தேசிய அளவிலான மொத்த பட்டியலில் 52வது இடத்தையும் பிடித்துள்ளார்.

நீட் தேர்வில் முன்னேறிய தமிழகம் : மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணம்

அரக்கோணத்தை சேர்ந்த தமிழ்வழியில் படித்த சக்திவேல் என்ற மாணவன் நீட் வகுப்பிற்கு செல்லாமலேயே 720 க்கு 674 மதிப்பெண் பெற்றுள்ளார்.

தமிழக மாணவர்களாலும், அரசு பள்ளி மாணவர்களாலும், நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாது என விமர்சனங்கள் எழுந்த நிலையில் அதனை உடைக்கும் வகையில் இம்முறை அதிக அரசு பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெற்றது தமிழக மாணவர்களால் நீட் தேர்வில் வெற்றி பெற முடியும் என நிரூபித்துள்ளது.