கோவின் இணையதளத்திலும் தமிழ் புறக்கணிப்பு!

 

கோவின் இணையதளத்திலும் தமிழ் புறக்கணிப்பு!

கொரோனா தடுப்பூசிக்கு பதிவு செய்யும் கோவின் தளத்தில் தமிழ் புறக்கணிக்கப்பட்டதால் சர்ச்சை கிளம்பியுள்ளது

கோவின் இணையதளத்திலும் தமிழ் புறக்கணிப்பு!

இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுவருகிறது. தற்போது 18 வயது முதல் 44 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுவருகிறது. தடுப்பூசி குறித்த விவரங்களை அறிந்துகொள்வதற்காகவும் முன்பதிவு செய்வதற்காகவும் மத்திய அரசு சார்பில் கோவின்(cowin.gov) என்ற இணையதளம் தொடங்கப்பட்டது.

இந்நிலையில் கோவின் இணையதளத்தில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம், இந்தி மட்டுமே இருந்த நிலையில், கூடுதலாக சேர்க்கப்பட்ட 9 மொழிகளில் தமிழ் இல்லாதது முன்பதிவு செய்வதில் சிரமம் என புகாரளிக்கப்பட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள மதுரை எம்.பி சு.வெங்கடேசன், “கொரோனா தடுப்பூசிக்கு பதிவு செய்யும் இணையதளமான COWIN ஆங்கிலத்திலும், இந்தியிலும் மட்டுமே இருந்த நிலையில் இன்று புதிதாக 9 மொழிகளில் கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் தமிழ் மொழி புறக்கணிக்கப் பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. #Cowin #Covid19” எனக் குறிப்பிட்டுள்ளார்.