தாம்பரத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவமனையை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்த முடிவு!

 

தாம்பரத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவமனையை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்த முடிவு!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகமாக பரவிக் கொண்டே வருகிறது. நேற்று மட்டும் தமிழகத்தில் 1,843 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46,504 ஆக உயர்ந்தது. சென்னையில் மட்டும் நேற்று 1,257 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 33,244 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் தான் அதிக அளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸில் இருந்து மக்களை காக்க 75,000 படுக்கைகள் தயார் நிலையில் இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் குழு தெரிவித்தது.

தாம்பரத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவமனையை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்த முடிவு!

இந்த நிலையில் சென்னை தாம்பரத்தை அடுத்த சானடோரியத்தில் உள்ள, தேசிய சித்த மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட சென்னை புழல் சிறை கைதிகள் 22 பேர் அங்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், 5 நாட்களிலேயே அவர்கள் அனைவரும் குணமடைந்து விட்டதாக அம்மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் கொரோனாவை 5 வகையான சித்த மருந்துகள் மூலம் மூன்றே நாளில் குணப்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால், அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.