நடிகை தமன்னாவிற்கு கொரோனா உறுதி!

 

நடிகை தமன்னாவிற்கு கொரோனா உறுதி!

இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், அவரது மகன் அபிஷேக் பச்சன் ஆகியோருக்கு சில நாட்களுக்கு முன்னர் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அபிஷேக் பச்சனின் மனைவியான முன்னாள் உலக அழகி நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சனுக்கும், அவரது மகளுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவில் இவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அனைவரும் சிகிச்சைக்கு பின் குணமடைந்தனர்.

நடிகை தமன்னாவிற்கு கொரோனா உறுதி!

தமிழ் தெலுங்கு இந்தி சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான தமன்னாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமன்னா விரைவாக குணமடைய நாடு முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.