‘சசிகலா’ கதாபாத்திரத்தால்… அரசியலில் புயல் வீசப் போகும் “தலைவி” படம்’

 

‘சசிகலா’ கதாபாத்திரத்தால்… அரசியலில் புயல் வீசப் போகும் “தலைவி” படம்’

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை மற்றும் அரசியலை மையப்படுத்தி தயாரிக்கப்பட்டு வரும் படம் ”தலைவி.” முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி,ஜெயலலிதாவின் தோழி சசிகலா என நிஜக் கதாபாத்திரங்களை கருவாகக் கொண்டு உருவாகும் இந்தத் “தலைவி” படம் தமிழக அரசியலில் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்த காத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

‘சசிகலா’ கதாபாத்திரத்தால்… அரசியலில் புயல் வீசப் போகும் “தலைவி” படம்’


பிரபுதேவா, தமன்னா நடித்து வெளிவந்த “தேவி 2” படத்திற்கு பிறகு ஏ.எல் விஜய் தற்போது இந்தப் படத்தை இயக்கி வருகிறார் ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். பாகுபலி-புகழ் விஜயேந்திர பிரசாத் வசனங்கள் எழுதியுள்ளார்.விஷ்ணு இந்தூரி மற்றும் ஷைலேஷ் ஆர் சிங் ஆகியோரால் தயாரிக்கப்படும் இந்தப்படம் தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. படத்தின் இந்தி பதிப்பிற்கு ‘ஜெயா’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்தப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ஜெயலலிதாவாக நடிக்கிறார். எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமி நடிக்கிறார். ஜெயலலிதாவின் தோழி சசிகலாவாக நடிகை பூரணா நடிக்கிறார். இவர் சூர்யா, நடித்த ’காப்பான்’ படத்தில் சமுத்திரகனிக்கு ஜோடியாக நடித்தவர். முன்னதாக நடிகை பிரியாமணி நடிப்பதாக இருந்தது..இப்போது அவர் மாற்றப்பட்டு விட்டார். கருணாநிதி கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ், எம்.ஜி.ஆரின்

‘சசிகலா’ கதாபாத்திரத்தால்… அரசியலில் புயல் வீசப் போகும் “தலைவி” படம்’

உதவியாளராக இயக்குனர் சமுத்திரக்கனி, எம்.ஜி.யாரின் மனைவி ஜாணகியாக மதுபாலா, மற்றும் வித்யா பிரதீப் ஆகியோர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். மற்றொரு முக்கிய பாத்திரத்தில் பாக்யஸ்ரீ நடிக்கிறார்.பாக்யஸ்ரீ இந்தியில், மைனே பியார் கியா படத்தில் சல்மான்கான் ஜோடியாக நடித்தவர்.
இந்தப் படம் கடந்த ஜூன் மாதம் திரைக்கு வர திட்டமிடப்பட்டிருந்த நிலையில், கொரோனா காரணமாக படப்பதிவு, கடந்த ஏழு மாதங்களாக தள்ளிப்போடப்பட்டு வந்தது. இந்த நிலையில் தலைவி பட சூட்டிங்

‘சசிகலா’ கதாபாத்திரத்தால்… அரசியலில் புயல் வீசப் போகும் “தலைவி” படம்’

ஹைதராபாத்தில் தொடங்கியிருக்கிறது.சில முக்கிய காட்சிகள் தவிர மற்றவை அனைத்தும் படமாக்கப்பட்டு விட்டதாகச் சொல்கிறார்கள்.
இந்தப் படம், ஜெயலலிதாவின் அரசியல் பிரவேசத்துக்குப் பிந்தைய சூழல்களை விவரிக்கும் படமாக இருக்கும் என்று தெரிய வருகிறது. ஆனாலும் ஜெயலலிதாவின் முந்தைய சினிமா வாழ்க்கையும் இடம் பெற்றுள்ளதாம். எம்ஜியார், ஜெயலலிதா போல் கங்கனா ரனாவத், அரவிந்த் சாமி ஆடிப்படும் பாடல் காட்சிகள் இடபெற்றுள்ளன என்கிறார்கள்.
ஜெயலலிதா ரோலில் நடிப்பதற்காக தனது உடல் எடையை 10 கிலோ வரை அதிகரித்துள்ளார் கங்கனா. இதற்காக சில ஹார்மோன் மாத்திரைகளை சாப்பிட்டு வருகிறாராம்.அது மட்டுமின்றி ஜெயலலிதா போல தோற்றமளிப்பதற்காக ஸ்பெஷலான “புரோஸ்தடிக்” என்ற மேக்கப் போடப்படுகிறது. அதற்காக கங்கனா அமெரிக்கா சென்று டெஸ்ட் எடுத்தார். ஜேசன் காலின்ஸ் என்ற ஹாலிவுட் புகழ் கலைஞர்தான் கங்கனாவின் தோற்றத்திற்காக இப்படத்தில் பணியாற்றுகிறார். கங்கனா ரனாவத் தற்போது தமிழில் பேசவும் பாரதநாட்டியம் ஆடவும் கற்று கொண்டிருக்கிறார்.
இந்தப் படப் பணிகள் ஆரம்பித்து ஒன்றரை ஆண்டுகள் ஆகி விட்டன.தற்போது எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தேர்தலும் நெருங்கிக் கொண்டிருக்கிறது.”தலைவி” படத்தை பொறுத்தவரை ஜெயலலிதா தரப்பு காட்சிகள் படமாக்கப் படுவதற்கு ஏற்பட்ட எதிர்ப்புகளை நீதி மன்றம் மூலம் முடிவுக்கு கொண்டு வந்து விட்டனர்.

‘சசிகலா’ கதாபாத்திரத்தால்… அரசியலில் புயல் வீசப் போகும் “தலைவி” படம்’


ஏற்கெனவே ஒடிடியில் வெளியிடுவதற்கு ‘நெட் பிளக்ஸ்’ நிறுவனத்திடமிருந்து ரூ 55 கோடி கை மாறியதாகச் சொல்லப்படும் , எதிர் வரும் அரசியல் மாற்றங்களை முன் வைத்து இந்தப் படத்தை தேர்தலுக்கு முன்னரே வெளியிட்டு விட வேண்டும் எனப் படத்தாயரிப்பு குழுவினர் முடிவு செய்துள்ளனர். படத்தில் ஜெயலலிதா தொடர்பான காட்சிகளை கன,கச்சிதமாக எடுத்துள்ள படக்குழுவினர் சசிகலாவை காட்சிப்படுத்துவதில் குழம்பி போயுள்ளனராம்.திரைக்கு வரும் பொழுது சசிகலா தொடர்பான காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்தக் கூடும் என்கிறார்கள்
“தலைவி” படத்தில் சசிகலா சிறைக்குச் செல்வதோடு அவரது காட்சிகளை முடித்துவிடத் திட்டமிட்டுள்ளனர். இதே போல் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி கேரக்டரும் புதிய சர்ச்சையைக் கிளப்பலாம்

‘சசிகலா’ கதாபாத்திரத்தால்… அரசியலில் புயல் வீசப் போகும் “தலைவி” படம்’

என்கிறார்கள்.இதனால் படத்தில் கருணாநிதிக்கு அதிக பட்ச காட்சிகள் இல்லாமல் ஒரு சில காட்சிகள் மட்டும் வைத்துள்ளனராம்.
இதற்கிடையே தெலுங்கில் இதே போல் ஜெயலலிதாவையும் சசிகலாவையும் மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் ராம் கோபால் வர்மாவின் “சசிகலா” ஆந்திர இயக்குனர் கே.ஜகதீஸ்வர ரெட்டியின் “சசிலலிதா” ஆகிய படங்கள் தமிழக அப்படியே கிடப்பில் இருக்கின்றன என்பது குறிபிடத்தக்கது.
தேர்தல் சமயத்தில் “தலைவி” படத்தை வெளியிடுவதால் அ.தி.மு.க.விற்கு மிகப் பெரிய சாதகமாக அமையும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
“டாப் தமிழ் நியூஸ்” செய்திகளுக்காக –இர.சுபாஸ் சந்திர போஸ்.