யூ டியூப் வீடியோக்களை பார்த்து 2 வங்கிகளில் கொள்ளையடித்த ஒடிசா வியாபாரி… 2 வாரத்தில் போலீசிடம் சிக்கினார்

யூ டியூப் வீடியோக்களை பார்த்து 2 வங்கிகளில் கொள்ளையடித்த ஒடிசா வியாபாரி… 2 வாரத்தில் போலீசிடம் சிக்கினார்

ஒடிசாவை சேர்ந்த வியாபாரி ஒருவர் யூ டியூப் வீடியோக்களை பார்த்து 2 வங்கிகளில் கொள்ளையடித்தார். ஆனால் கொள்ளையடித்த 2 வாரத்துக்குள் போலீசாரிடம் சிக்கினார்

ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் ரெடிமேட் ஆடையகம் நடத்தி வருபவர் 25 வயதான சவுமியாரஞ்சன் ஜெனா. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய அரசு அமல்படுத்திய லாக்டவுனால் ஜெனாவுக்கு கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இழப்புகளை சரிசெய்வதற்காக கடந்த மாதம் 7ம் தேதி இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிலும், 28ம் தேதியன்று பேங்க் ஆப் இந்தியா வங்கியிலும் மொத்தம் ரூ.12 லட்சம் கொள்ளையடித்துள்ளார்.

யூ டியூப் வீடியோக்களை பார்த்து 2 வங்கிகளில் கொள்ளையடித்த ஒடிசா வியாபாரி… 2 வாரத்தில் போலீசிடம் சிக்கினார்
சவுமியாரஞ்சன் ஜெனா

கொள்ளையடித்த பணத்தில் ரூ.60 ஆயிரத்தை வங்கியில் டெபாசிட் செய்ய வங்கிக்கு சென்ற போது போலீசார் அவரை பிடித்தனர். இது தொடர்பாக காவல்துறை ஆணையர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: லாக்டவுன் காரணமாக ஏற்பட்ட நிதிநெருக்கடியை சமாளிக்க வங்கிகளில் குற்றவாளி கொள்ளையடித்துள்ளார். யூ டியூப்புகளில் வீடியோக்களை பார்த்து கொள்ளையடிக்கும் ஐடியாக அவருக்கு ஏற்பட்டுள்ளது.

யூ டியூப் வீடியோக்களை பார்த்து 2 வங்கிகளில் கொள்ளையடித்த ஒடிசா வியாபாரி… 2 வாரத்தில் போலீசிடம் சிக்கினார்
காவல்துறை ஆணையர்

இதனையடுத்து தலையில் ஹெல்மெட் மாட்டிக் கொண்டு பொம்மை துப்பாக்கியுடன் வங்கிகளின் உள்ளே சென்று பணியாளர்களை மிரட்டி பணத்தை குற்றவாளி கொள்ளையடித்துள்ளார். கொள்ளையடித்த 2 வங்கிகளிலும் குற்றவாளி கடன் வாங்கியுள்ளார். இதுவரை ரூ.6 லட்சத்தை திருப்பி செலுத்துள்ளார். கொள்ளையடித்த பணத்தில் ஒரு சிறிய தொகையை செலுத்தினால் தன் மீது யாருக்கு சந்தேகம் வராது என குற்றவாளி நினைத்து வங்கியில் பணத்தை டெபாசிட் செய்ய வந்தார். நாங்கள் அவரை பிடித்து விட்டோம். அவரிடமிருந்து கொள்ளையடித்த பணத்தில் ரூ.10 லட்சம், வாகனம் மற்றும் கொள்ளையடிக்க பயன்படுத்திய பொம்மை துப்பாக்கிகளை பறிமுதல் செய்தோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.