6 மாத காலத்திற்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டது தாஜ்மஹால்!

6 மாத காலத்திற்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டது தாஜ்மஹால்!

கொரோனா வைரஸ் காரணமாக மூடப்பட்டு கிடந்த தாஜ்மஹால் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக சுற்றுலா தலங்கள், பொழுதுபோக்கு இடங்கள் கடந்த ஆறு மாத காலமாக மூடப்பட்டு கிடந்தன.

6 மாத காலத்திற்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டது தாஜ்மஹால்!

இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால் மற்றும் ஆக்ரா கோட்டை இன்று முதல் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ளது. தாஜ்மஹாலுக்கு வரும் சுற்றுலா பயணிகள், சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

6 மாத காலத்திற்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டது தாஜ்மஹால்!

தாஜ்மஹாலில் ஒரு நாளுக்கு 5000 சுற்றுலாப் பயணிகளும், ஆக்ரா கோட்டையில் 2,500 சுற்றுலாப் பயணிகளும் அனுமதிக்கப்படுவர் .