‘சரக்கு பெட்டிகள் எங்கிருந்தாலும் கண்டுபிடிக்கும் டேக்’ ரயில்வே துறை நடவடிக்கை

 

‘சரக்கு பெட்டிகள் எங்கிருந்தாலும் கண்டுபிடிக்கும் டேக்’ ரயில்வே துறை நடவடிக்கை

உலகின் மிகப் பெரிய ரயில்வே துறைகளில் முதன்மையானவற்றில் ஒன்று இந்திய ரயில்வே. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை கோடிக்கணக்கில் நபர்கள் பயணிக்கிறார்கள். லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிகிறார்கள். மனிதர்கள் பயணம் செய்வது மட்டுமல்லால் கூட்ஸ் வண்டிகளின் இயக்கமும் முக்கியமானது. விலை மதிப்புள்ள பொருள்கள் முதல் மக்களுக்குத் தேவையான அடிப்படை பொருள்களை எடுத்துச் செல்வதும் நடக்கும். எனவே, குறிப்பிட்ட காலத்திற்குள் அந்தப் பொருள்கள் உரிய இடத்திற்குச் செல்ல வேண்டியது அவசியம்.

‘சரக்கு பெட்டிகள் எங்கிருந்தாலும் கண்டுபிடிக்கும் டேக்’ ரயில்வே துறை நடவடிக்கை

எனவே, அவற்றைப் பராமரிப்பதும் கண்காணிப்பது மிகவும் அவசியம். அதற்காக இந்திய‌ ரயில்வே துறை புது வகையைக் கையாள விருக்கிறது.

இதுகுறித்து அவர்கள் கொடுத்துள்ள அறிவிப்பில், ‘ரேடியோ – அலைவரிசை அடையாள டேக்குகளை (ஆர்எஃப்ஐடி) அனைத்து சரக்கு ரயில் பெட்டிகளிலும், 2022 டிசம்பர் மாதத்திற்குள் பொருத்தி முடிப்பதென ரயில்வேத் துறை திட்டமிட்டுள்ளது.

‘சரக்கு பெட்டிகள் எங்கிருந்தாலும் கண்டுபிடிக்கும் டேக்’ ரயில்வே துறை நடவடிக்கை

இது அனைத்து சரக்கு ரயில் பெட்டிகளின் தடத்தைக் கண்டறிய உதவும்.
இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 23,000 சரக்குப் பெட்டிகளுக்கு டேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. கொவிட்-19 பெருந்தொற்றால் இந்தப் பணி சிறிது மந்தப்பட்டாலும், தொடர்ந்து வேலைகள் நடைபெற்று வருகின்றன.

தற்போது ரயில்வேத் துறை சரக்கு ரயில் பெட்டிகள் தொடர்பான தகவல்களை பணியாளர்களைக் கொண்டு பராமரித்து வந்தாலும் இவற்றில் தவறு ஏற்பட வாய்ப்புள்ளது. ஆர்எஃப்ஐடி கருவிகளால் சரக்குப் பெட்டிகள் மற்றும் எஞ்சின்கள் இருக்கும் இடத்தை எளிதாக கண்டறிய முடியும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.