பாகிஸ்தான் அணிக்கு வாழ்வா… சாவா ஆட்டம் இது! PakVsEng

 

பாகிஸ்தான் அணிக்கு வாழ்வா… சாவா ஆட்டம் இது! PakVsEng

கொரோனா கால பேரிடர் வேளையிலும் துணிச்சலோடு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது, கொரோனா பரிசோதனைகள், தோல்விகள் தரும் அழுத்தம் என போராடி வருகிறது பாகிஸ்தான் அணி.

பாகிஸ்தான் அணிக்கு வாழ்வா… சாவா ஆட்டம் இது! PakVsEng

மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி த்ரில் வெற்றி பெற்றது. அடுத்த போட்டியில் அதிகநேரம் மழையே ஆடியதால் டிராவில் முடிந்தது. மூன்றாம் ஆட்டமும் டிராவில் முடிய டெஸ்ட் தொடரை இங்கிலாந்து 1:0 எனும் கணக்கில் வென்றது.

பாகிஸ்தான் அணிக்கு வாழ்வா… சாவா ஆட்டம் இது! PakVsEng

அடுத்து, 3 போட்டிகள் கொண்ட டி20 மேட்ச் தொடங்கியது. முதல் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 16.1 ஓவர்களில் 131 ரன்கள் குவித்தது. ஆனால், மழை குறுக்கிடவே ஆட்டம் முடிவு எட்டப்படாமல் முடிவடைந்தது.

இரண்டாம் டி20 போட்டியில், முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 195 ரன்களைக் குவித்தது. நல்ல ஸ்கோர்தான் இது என்றாலும் இங்கிலாந்து வீரர்கள் மோர்கன். டேவிட் மலன் ஆகியோரின் வெறித்தனமான ஆட்டத்தால் 5 பந்துகள் மிச்சமிருக்கும்போதே இங்கிலாந்து அணி ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

பாகிஸ்தான் அணிக்கு வாழ்வா… சாவா ஆட்டம் இது! PakVsEng

இதன்மூலம் 1:0 எனும் கணக்கில் முன்னிலையில் உள்ளது இங்கிலாந்து அணி.

இந்நிலையில் இன்று டி20 தொடரின் மூன்றாம் போட்டி நடைபெற இருக்கிறது. இதில் பாகிஸ்தான் அணி வென்றால் மட்டுமே தொடரைச் சமன்செய்ய முடியும். மாறாக தோற்றுவிட்டால் டெஸ்ட் தொடரை இழந்ததுபோல, டி20 தொடரையும் இழக்க வேண்டியிருக்கும். அதனால், இன்றைய போட்டி, பாகிஸ்தான் அணிக்கு வாழ்வா… சாவா போட்டிதான்.

பாகிஸ்தான் அணிக்கு வாழ்வா… சாவா ஆட்டம் இது! PakVsEng

இணையத்தில் எந்த அணி வெற்றிப்பெறும் என்ற கணிப்பில் 62 சதவிகிதத்தினர் இங்கிலாந்து அணிக்கே வாய்ப்பு என்றும் 38 சதவிகிதத்தினர் பாகிஸ்தான் அணியே வெல்லும் என்றும் வாக்களித்துள்ளனர். ஆட்டம் தொடங்கி, யார் பேட்டிங் என்பது முடிவு செய்யப்பட்டது, இந்த விகிதங்கள் மாறக்கூடும்.