Home விளையாட்டு கிரிக்கெட் "நெட் பவுலராவே திரும்பி போய்டனும் தான் நினச்சேன்… இப்போ ரொம்பவே ஹேப்பியா இருக்கு ண்ணா" - நடராஜனின் 'கூச்ச' தமிழ்!

“நெட் பவுலராவே திரும்பி போய்டனும் தான் நினச்சேன்… இப்போ ரொம்பவே ஹேப்பியா இருக்கு ண்ணா” – நடராஜனின் ‘கூச்ச’ தமிழ்!

பும்ராவிற்கு காயம் ஏற்பட்டதன் காரணமாக நான்காவது டெஸ்டில் அவருக்குப் பதிலாக தமிழ்நாட்டைச் சேர்ந்த நடராஜன் அறிமுக வீரராகக் களமிறக்கப்பட்டார். ஒருநாள், டி20 தொடர்களில் அறிமுக போட்டிலேயே அசத்திய நடராஜன் மீது பெரிதும் எதிர்பார்ப்பு நிலவியது.

ஆட்டத்தின் முக்கியமான கட்டத்தில் அவர் லபுசானேயின் விக்கெட்டை எடுத்தி எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்தார். அந்த விக்கெட்டை எடுக்கவில்லை என்றால் ஆஸ்திரேலியா 400 ரன்களுக்கு மேல் அடித்திருக்க சாத்தியக்கூறுகள் அதிகம். இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட்களை எடுக்காவிட்டாலும், முதல் இன்னிங்ஸில் மூன்று விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.

தற்போது அவர் கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று வைரலாகியுள்ளது. மூன்றாம் நாள் ஆட்டத்தின் முடிவில் பிசிசிஐ சார்பாக அறிமுக நாயகர்களான வாசிங்டன் சுந்தரிடமும் நடராஜனிடம் அஸ்வின் பேட்டி எடுத்தார். ஷர்துல் தாக்கூரும் உடனிருந்தார்.

“சொல்லு நட்டு… நீ தான் மிட்செல் ஸ்டார்க்க கம்பர்டபிளா ஆடுன, எப்படி? ” என்று அஸ்வின் கேட்க, அதற்கு நடராஜன் கூச்சப்பட்டுக் கொண்டே, “கம்பர்டபிளா ஆடுனேனா… மொத பாலு கண்ணுக்கே தெரில்லண்ணா’ என்றார். அவர் சொன்ன உடனே மற்ற மூவரும் சிரித்தனர்.

அதன்பின், “ஒன்டே, டி20 இப்போ டெஸ்ட் மூனு சீரிஸ்லயும் அறிமுகமானது எப்படி ஃபீல் ஆகுது? சொல்லு மச்சி” என அஸ்வின் கேட்டார். அதற்கு அவர், “ரொம்ப ஹேப்பியா இருக்கு ண்ணா. நெட் பவுலரா வந்துட்டு நெட் பவுலராவே போய்டுவேனு தான் நினச்சேன். ஆனா நான் மெயின் பவுலரா ஆடுவேனு எதிர்பாக்கவே இல்ல. நிறைய பிளேயர்ஸுக்கு காயம் ஆனாதால வாய்ப்பு கிடச்சிருச்சி’ என்றார் நடராஜன்.

நடராஜனின் இந்த வீடியோவை சமூக வலைதளவாசிகள் ஷேர் செய்து உலக கிரிக்கெட் அரங்கில் தமிழ் உரையாடல்களைக் கேட்பது இனிமையாக இருப்பதாக சிலாகித்துள்ளனர்.

மாவட்ட செய்திகள்

Most Popular

9 ஆண்களுக்கு தூக்கு; 4 பெண்களுக்கு ஆயுள்: ஒரே குடும்பத்தினருக்கு ஏன் இந்த தண்டனை?

ஒன்பது ஆண்கள் தூக்கு தண்டனையும், 4 பெண்களுக்கு ஆயுள் தண்டையையும் விதித்து தீர்ப்பளித்திருக்கிறது பீகார் நீதிமன்றம். ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேருக்கு விதிக்கப்பட்டிருக்கும் இந்த தீர்ப்பு நாடெங்கிலும் பரபரப்பை...

“ஸ்டாலினை எதிர்த்து கமல் போட்டி” சுத்தமான இடத்தில் நிற்பேன் என நக்கல்!

மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் ஹாசன் அம்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் நாய் ஜாக்கிரதை என்று போர்டு வைப்பதுபோல...

ஒருத்தன் கத்தியை காமிச்சான் -இன்னொருத்தன் துப்பாக்கியை காமிச்சான் -இன்ஸ்பெக்டர் மனைவிக்கே நடந்த கொடுமை .

தனியே வந்த ஒரு இன்ஸ்பெக்டரின் மனைவியிடம் துப்பாக்கியை காமித்து பணத்தை கொள்ளையடித்தவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்

“தமிழகத்தில் பாஜக கால் பதிக்கக் கூடாது; அதிமுக கூட்டணி வெற்றி பெறக் கூடாது”

தமிழகத்தில் பாஜக கால்பதிக்க கூடாது, அதிமுக கூட்டணி வெற்றி பெறக்கூடாது என்ற நோக்கத்தில் திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளோம் என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
TopTamilNews