“1 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பாடத்திட்டம் குறைப்பு” – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

“1 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பாடத்திட்டம் குறைப்பு” – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

1 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பாடத்திட்டம் குறைத்து பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

“1 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பாடத்திட்டம் குறைப்பு” – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இருப்பினும் மாணவர்களின் நலன் கருதி ஆன்லைன் வகுப்புகள், கல்வி தொலைக்காட்சி மூலம் வகுப்புகள் என நடத்தப்பட்டு வருகிறது. இந்த சூழலில் 1ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பாடத்திட்டத்தை குறைத்து பள்ளிக்கல்வித்துறை அரசாணையை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்களுக்கு கல்வி சுமை குறையும் என்றும் அவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

“1 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பாடத்திட்டம் குறைப்பு” – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

1 முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு 40 முதல் 50 சதவீதம் வரையான பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளன . அதேபோல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு 32 சதவீதமும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு 39 சதவீதமும், 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தலா 35 சதவீதமும் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளது, குறைக்கப்பட்ட பாடத்திட்டங்களின் அடிப்படையிலேயே தேர்வுகள் நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.அதேசமயம் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் முழு பாடத்தையும் படிக்க வேண்டியது அவசியம் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.