உங்கள் நேரத்தை வங்கியில் சேமிக்கலாம் – உலக அதிசயத் திட்டம்

 

உங்கள் நேரத்தை வங்கியில் சேமிக்கலாம் – உலக அதிசயத் திட்டம்

வங்கியில் பணம் சேமித்து தேவைப்படும்போது எடுக்கலாம் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனால் உங்கள் நேரத்தை வங்கியில் சேமிக்க முடியுமா?அதைப் பின்னர் தேவைப்படும் பொழுது எடுக்க முடியுமா? உலகின் ஒப்பற்ற திட்டம் ஒன்றை சுவிட்சர்லாந்து நாடு செய்திருக்கிறது. சுவிட்சர்லாந்து நாட்டின் சமூக பாதுகாப்பு அமைச்சகம் “டைம் பேங்க்” என்கிற கால வங்கித் திட்டம் ஒன்றை ஆரம்பித்திருக்கிறது.இது முதியோருக்கான நவீன பென்ஷன் திட்டமாகும்.

உங்கள் நேரத்தை வங்கியில் சேமிக்கலாம் – உலக அதிசயத் திட்டம்

இந்த ‘டைம் பேங்க்’’கில் யார் வேண்டுமனாலும் கணக்கு தொடங்கலாம். இதில் கணக்கு தொடங்குபவர்கள் தங்களுடைய நேரத்தைச் சேமிக்கலாம்.பிறகு தேவைப்படும் போது அந்த நேரத்தைப் பயன் படுத்திக் கொள்ளலாம். இந்த வங்கியில் கணக்கு தொடங்கியவர்கள் தங்களுக்கு கிடைக்கும் ஓய்வு நேரத்தில் பிறருக்கு உதவிகள் செய்ய வேண்டும்.ஏதாவது முதியவருக்கோ அல்லது மாற்றுத் திறனாளிக்கோ அல்லது ஏழைகளுக்கோ இப்படி யாருக்கோ, அவர்கள் வீட்டிற்குச் சென்று அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும். உதாரணமாக அவர்களுக்கு சமையல் செய்து கொடுக்கலாம் கடைகளுக்குச் சென்று பொருட்கள் வாங்கித் தரலாம். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லலாம் இப்படி ஒவ்வொரு நாளும் செய்யும் உதவிகளின் நேரம் குறித்து வங்கியில் கணக்கு வைக்கப்படும்.

உங்கள் நேரத்தை வங்கியில் சேமிக்கலாம் – உலக அதிசயத் திட்டம்

டைம் பேங்கில் கணக்கு தொடங்கி இப்படி நேரத்தை சேமிப்பவர்களுக்கு அவசர உதவிக்கு ஆட்கள் தேவைப்பட்டாலோ அல்லது முதுமையடைந்து பிறரது உதவி தேவைப்பட்டாலோ டைம் பேங்க் ஆட்களை அனுப்பி வைக்கும்.நீங்கள் வங்கியில் சேமித்த நேரத்திலிருந்து அதனைக் கழித்துக் கொள்வார்கள்.

உங்கள் நேரத்தை வங்கியில் சேமிக்கலாம் – உலக அதிசயத் திட்டம்

ஒவ்வொரு வருட முடிவிலும் கணக்கில் எத்தனை மணி நேரம் வரவு வைக்கப்பட்டுள்ளது என்று கணக்கிட்டு”நேர சேமிப்பு அட்டை” ஒன்றும் வழங்குகிறார்கள். சுவிட்சர்லாந்து நாட்டின் இந்தத் திட்டம் நாட்டின் பென்ஷன் செலவுகளைக் குறைப்பது மட்டும் அல்லாமல் பெரிய சமூகத் தீர்வாகவும் உள்ளது.பெரும்பான்மையான சுவிஸ் குடிமக்கள் இந்த முதியோர் நலத் திட்டத்தை ஆதரித்து தங்கள் பங்களிப்பை வழங்குகிறார்கள்.நாமும் இந்தத் திட்டத்தைத் தொடங்கி நமது நாட்டு முதியவர்களுக்கு உதவி செய்யலாமே?

–இர.போஸ்