மதுபானம் டோர் டெலிவரி செய்யும் ஸ்விக்கி, ஜொமேட்டோ நிறுவனங்கள்

 

மதுபானம் டோர் டெலிவரி செய்யும் ஸ்விக்கி, ஜொமேட்டோ நிறுவனங்கள்

ராஞ்சி: ஸ்விக்கி, ஜொமேட்டோ ஆகிய இவ்விரு உணவு விநியோக நிறுவனங்கள் இன்று முதல் சில நகரங்களில் மதுபானம் டெலிவரி செய்யத் தொடங்கியுள்ளன.

ஸ்விக்கி, ஜொமேட்டோ ஆகிய இவ்விரு உணவு விநியோக நிறுவனங்கள் இன்று முதல் சில நகரங்களில் மதுபானம் டெலிவரி செய்யத் தொடங்கியுள்ளன. நாட்டின் கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் மது அருந்த முடியாமல் ‘குடி’மகன்கள் தத்தளித்துப் போனதை ஊடகங்கள், சமூக வலைதளங்கள் வாயிலாக அனைவரும் பார்த்தோம்.

மதுபானம் டோர் டெலிவரி செய்யும் ஸ்விக்கி, ஜொமேட்டோ நிறுவனங்கள்

இதையடுத்து இம்மாத தொடக்கத்தில் டாஸ்மாக் கடைகள் நாட்டின் சில மாநிலங்களில் திறக்கப்பட்டது. அதில் தமிழகமும் ஒன்று. டாஸ்மாக் கடைகள் திறந்ததும் அலைகடல் போல ஆயிரக்கணக்கானோர் வரிசையில் முண்டியடித்து நிற்கத் தொடங்கினர். இதனால் கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். டாஸ்மாக் கடைகளில் கூட்டத்தை தடுக்க டோக்கன் முறையும் அமல்படுத்தப்பட்டது. ஆனால் போலி டோக்கன் அச்சடித்து விநியோகம் செய்யப்பட்டதால் அதிலும் குளறுபடிகள் உண்டாகின.

மதுபானம் டோர் டெலிவரி செய்யும் ஸ்விக்கி, ஜொமேட்டோ நிறுவனங்கள்

இந்நிலையில், ஜார்கண்ட் மாநிலத்தில் குறிப்பிட்ட சில நகரங்களில் ஸ்விக்கி, ஜொமேட்டோ ஆகிய இவ்விரு உணவு விநியோக நிறுவனங்கள் இன்று முதல் மதுபானத்தை டோர் டெலிவரி செய்யத் தொடங்கியுள்ளன. குறிப்பாக ராஞ்சியில் இந்த சேவை இன்று தொடங்கப்பட்டுள்ளது. உணவு விநியோக நிறுவனங்கள் வீட்டுக்கே வந்து மதுபானத்தை கொடுப்பதால் சமூக இடைவெளி மற்றும் வாடிக்கையாளர் பாதுகாப்பு ஆகியவற்றை மேம்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது.