பினராயி விஜயனின் செயலாளருடன் மூன்று முறை வெளிநாட்டுக்கு சென்று வந்த ஸ்வப்னா! அமலாக்கத்துறை விசாரணையில் அதிர்ச்சி

பினராயி விஜயனின் செயலாளருடன் மூன்று முறை வெளிநாட்டுக்கு சென்று வந்த ஸ்வப்னா! அமலாக்கத்துறை விசாரணையில் அதிர்ச்சி

கேரள முதல்வர் பினராயி விஜயனின் தனிச் செயலாளராக இருந்த சிவசங்கரனுடன் தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ் மூன்று முறை வெளிநாட்டுக்கு சென்று வந்தது அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

பினராயி விஜயனின் செயலாளருடன் மூன்று முறை வெளிநாட்டுக்கு சென்று வந்த ஸ்வப்னா! அமலாக்கத்துறை விசாரணையில் அதிர்ச்சி
கேரளாவில் ஐக்கிய அரசு எமிரேட்ஸ் தூதரகத்தின் பெயரைப் பயன்படுத்தி தங்கக் கடத்தல் நடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் முதல்வர் அலுவலகம் வரை தொடர்பு இருப்பதாக செய்தி வெளியாகவே பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போராடி வருகின்றன.

பினராயி விஜயனின் செயலாளருடன் மூன்று முறை வெளிநாட்டுக்கு சென்று வந்த ஸ்வப்னா! அமலாக்கத்துறை விசாரணையில் அதிர்ச்சி
இந்த வழக்கில் முக்கிய நபராக ஸ்வப்னா சுரேஷ் கைது செய்யப்பட்டார். அவருக்கும் முதல்வர் பினராயி விஜயனின் முன்னாள் முதன்மை செயலாளர் சிவங்கரனுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. இந்த வழக்கில் தேசிய புலனாய்வு முகமையுடன் இணைந்து அமலாக்கத் துறையும் விசாரணை நடத்தி வருகிறது.
அமலாக்கத்துறை விசாரணையில் சிவசங்கரன் மற்றும் ஸ்வப்னா இடையிலான தொடர்புகள் குறித்து மேலும் பல திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளது என்று

பினராயி விஜயனின் செயலாளருடன் மூன்று முறை வெளிநாட்டுக்கு சென்று வந்த ஸ்வப்னா! அமலாக்கத்துறை விசாரணையில் அதிர்ச்சி

கூறப்படுகிறது. சிவசங்கரனுடன் இணைந்து ஸ்வப்னா மூன்று முறை வெளிநாட்டுக்கு சென்றுள்ளார். அங்கு சிவசங்கரனின் அறிவுறுத்தல் படி அவர் லாக்கரில் தங்கத்தை மறைத்து வைத்திருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக 2017ம் ஆண்டு ஸ்வப்னாவும் சிவங்கரனும் ஓமான் நாட்டுக்கு பயணம் மேற்கொண்டது பற்றி பல்வேறு தகவல் கிடைத்துள்ளதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், இந்த வழக்கு விசாரணை கேரளாவில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்ட மூன்று பேரின் நீதிமன்றக் காவல் இன்று நிறைவடைந்தது. அதைத் தொடர்ந்து அவர்கள் நீதிபதி முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களின் நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 26ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.