அரசு டெண்டர்களில் கலந்து கொள்ள சீன நிறுவனங்களுக்கு தடை போடுங்க… சீன பொருட்களை பாய்காட் பண்ணுங்க…

கிழக்கு லடாக்கில் சீன ராணுவத்தினரால் இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, அந்நாட்டு நிறுவனங்கள் அரசு டெண்டர்களில் பங்கேற்க தடை விதிக்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் தொடர்புடைய சுதேசி ஜாக்ரான் மன்ச் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக சுதேசி ஜர்க்ரான் மன்ச் அமைப்பின் இணை அமைப்பாளர் அஷ்வானி மஹாஜன் கூறியதாவது:

சுதேசி ஜாக்ரான் மன்ச்

மக்கள் சீன தயாரிப்புகளை தவிர்க்க இதுதான் சரியான நேரம். நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் மற்றம் இதர பிரபலங்கள் சீன தயாரிப்புகளை ஊக்குவிக்க கூடாது. இந்திய அரசால் வழங்கப்படும் எந்தவொரு டெண்டரிலும் சீன நிறுவனங்கள் பங்கேற்க தடை விதிக்க வேண்டும். எந்தவொரு சீன பொருட்களையும் கொள்முதல் செய்யக்கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சீன பொருட்களை புறக்கணித்தல்

கடந்த திங்கட்கிழமையன்று கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் இந்திய-சீன வீரர்கள் இடையே மோதல் நடந்தது. கம்பிகள் மற்றும் கற்களை கொண்டு சீன வீரர்கள் இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து இந்திய வீரர்களும் பதிலுக்கு அவர்களை தாக்கினர். இந்திய தரப்பில் 20 வீரர்கள் பலியாகினர். சீன தரப்பிலும் 30க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டதாக தகவல். நம் ராணுவ வீரர்கள் பலியான செய்தி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Most Popular

வாழ்த்து சொல்வதற்காகவா டெல்லி சென்றார் கு.க.செல்வம்?

தலைமை மீதிருந்த அதிருப்தியினால் திமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம் டெல்லி்யில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் அக்கட்சியில் இணைந்ததாக தகவல் வெளியான நிலையில், தான் பாஜகவில் இணையவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார் செல்வம். பின்னர் எதற்காக...

சென்னையில் ஒரு லட்சத்து 4,027 பேருக்கு கொரோனா! மாவட்ட வாரியான ரிப்போர்ட்!!

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இன்று புதிதாக 5,063 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,68,285 ஆக அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலானோர்...

30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறுவை நெல் சாகுபடியில் சாதனை படைத்த தமிழக அரசு!

தமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.87 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டிருப்பது தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் சாதனையாக கருதப்படுகிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த...

தமிழகத்தில் கொரோனாவால் 43 மருத்துவர்கள் உயிரிழந்ததாக வெளியான செய்தி தவறானது – அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் கொரோனாவால் 43 மருத்துவர்கள் உயிரிழந்ததாக வெளியான செய்தி தவறானது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், “கொரோனாவால் பாதிக்கப்பட்ட 77.8% குணமடைந்துள்ளனர். உயிர்காக்கும் மருந்துகள் தமிழகத்தில்...