மம்தாவுக்கு 62 ஆயிரம் வாக்குகள்தான.. ஜெய் ஸ்ரீ ராம் என்று முழங்க 2.13 லட்சம் பேர் என்னிடம் உள்ளனர்.. சுவேந்து

மம்தாவுக்கு 62 ஆயிரம் வாக்குகள்தான.. ஜெய் ஸ்ரீ ராம் என்று முழங்க 2.13 லட்சம் பேர் என்னிடம் உள்ளனர்.. சுவேந்து

மம்தா பானர்ஜி 62 ஆயிரம் வாக்குகளைதான் நம்பியுள்ளார். ஆனால் ஜெய் ஸ்ரீ ராம் என்ற முழங்க என்னிடம் 2.13 லட்சம் பேர் உள்ளனர் என்று பா.ஜ.க.வின் சுவேந்து ஆதிகாரி தெரிவித்தார்.

திரிணாமுல் காங்கிரசில் செல்வாக்கு மிக்க தலைவராக இருந்த சுவேந்து ஆதிகாரி அந்த கட்சியின் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த கட்சியிலிருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தார். இதனால் அதிருப்தி அடைந்த மம்தா பானர்ஜி, சுவேந்து ஆதிகாரியின் செல்வாக்கை சரிக்கும் நோக்கில், சுவேந்தின் சொந்த தொகுதியான நந்திகிராமில் தொகுதியில் போட்டியிட போவதாக சில தினங்களுக்கு முன் அறிவித்தார்.

மம்தாவுக்கு 62 ஆயிரம் வாக்குகள்தான.. ஜெய் ஸ்ரீ ராம் என்று முழங்க 2.13 லட்சம் பேர் என்னிடம் உள்ளனர்.. சுவேந்து
மம்தா பானர்ஜி

இதனால் சுவேந்து ஆதிகாரி ஷாக் ஆகுவார் என்று எதிர்பார்த்தால் சினம் கொண்ட சிங்கமாக வெகுண்டு எழுந்தார். நந்திகிராமில் போட்டியிட போகிறேன் என்று மம்தா பானர்ஜி அறிவித்த சில மணி நேரங்களில், மம்தா பானர்ஜியை குறைந்தபட்சம் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கவில்லை என்றால் அரசியலிருந்து விலகி விடுகிறேன் என்று பதிலடி கொடுத்தார். மேலும், நேற்று முன்தினம், மம்தா நந்திகிராமில் போட்டியிடுவதால் அவர் முன்னாள் முதல்வர் என்று லெட்டர் பேடு அடித்து தயாராக வைத்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

மம்தாவுக்கு 62 ஆயிரம் வாக்குகள்தான.. ஜெய் ஸ்ரீ ராம் என்று முழங்க 2.13 லட்சம் பேர் என்னிடம் உள்ளனர்.. சுவேந்து
பா.ஜ.க.

நந்திகிராமில் பா.ஜ.க. சார்பில் சுவேந்து ஆதிகாரி போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுமா என்று இன்னும் தெரியவில்லை. இந்த சூழ்நிலையில், சுவேந்து ஆதிகாரி நேற்று பேசுகையில், மம்தா பானர்ஜி 62 ஆயிரம் வாக்குகளை நம்பியுள்ளார். ஆனால் ஜெய் ஸ்ரீ ராம் என்று முழக்கமிட என்னிடம் 2.13 லட்சம் பேர் உள்ளனர். நந்திகிராம் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் யார் போட்டியிட்டாலும் அவர்களை வெற்றி பெற செய்யும் பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன். என்று தெரிவித்தார்.