கூட்டணிக்காக அதிமுகதான் எங்களிடம் கெஞ்சுகிறது; நாங்கள் கெஞ்சவில்லை- தேமுதிக சுதீஷ்

 

கூட்டணிக்காக அதிமுகதான் எங்களிடம் கெஞ்சுகிறது; நாங்கள் கெஞ்சவில்லை- தேமுதிக சுதீஷ்

சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பாமக, பாஜகவுக்கு இணையாக தங்களுக்கும் தொகுதி ஒதுக்க வேண்டும் என்று தேமுதிக வலியுறுத்தி வருகிறது. இதனால் சென்னையில் உள்ள தனியார் விடுதியில் இன்று நான்காவது நாளாக இரு கட்சிகளுக்குமிடையே பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் எந்த முடிவு எட்டப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த தேமுதிக, தனித்து போட்டியிட முடிவு செய்ததாக தகவல்கள் வெளியாகின. அக்கட்சியின் துணை செயலாளர் சுதீஷ், நமது முதல்வர் கேப்டன், நமது சின்னம் முரசு என இணையத்தில் பதிவிட்டிருந்தார்.

கூட்டணிக்காக அதிமுகதான் எங்களிடம் கெஞ்சுகிறது; நாங்கள் கெஞ்சவில்லை- தேமுதிக சுதீஷ்

இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக துணை செயலாளர் சுதீஷ், “கூட்டணிக்காக அதிமுகதான் நம்மை கெஞ்சுகிறது. நாம் அவர்களை கெஞ்சவில்லை. 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நாம் அதிமுக கூட்டணியில் இல்லை எனில் அதிமுக என்ற கட்சியே இருந்திருக்காது.வன்னியர்களுக்கு 10.5% உள்இட ஒதுக்கீடு கொடுத்தது தவறில்லை; ஆனால் மற்ற சாதிகளின் நிலை என்ன? மாநிலங்களவை எம்.பி. சீட் தருவதாக கூறுகிறார்கள்; ஆனால் அதற்காக நாங்கள் என்றுமே ஆசைப்பட்டதில்லை” எனக் கூறினார்.