கோயில் குடித்தனர்… இயற்கை உபாதைகளை கழித்தனர்!- பக்தர்களை பதறவைத்த அதிகாரி, காவலர்

 

கோயில் குடித்தனர்… இயற்கை உபாதைகளை கழித்தனர்!- பக்தர்களை பதறவைத்த அதிகாரி, காவலர்

கோயிலில் வைத்து மதுகுடித்ததோடு, இயற்கை உபாதை கழித்த அறநிலையத்துறை அதிகாரி மற்றும் காவலர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

கடலுார் மாவட்டம், மணவாளநல்லூரில் கொளஞ்சியப்பர் சுவாமி கோயில் உள்ளது. புகழ்பெற்ற இந்த கோயிலுக்கு பக்தர்கள் அலைமோதுவது வழக்கம். தற்போது கொரோனா காரணமாக கோயில்களை திறக்க தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை. இதனால், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயில்களுக்கு பக்தர்களின் வருகை இல்லாமல் இருந்தது. ஆனால், பூசாரிகள் வழக்கமான பூஜைகள் செய்யவும், துப்புரவு பணியாளர்கள் கோயிலை சுத்தமாக வைக்க மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

இந்த சூழ்நிலையில், கோயில் பொறுப்பு மேலாளர் சிவராஜன், காவலர் சிவக்குமார் ஆகியோர் அங்குள்ள நந்தவனத்தில் அமர்ந்து மது அருந்தியபடி, சிக்கன் சாப்பிட்டுள்ளனர். அளவுக்கு மீறி போதையில் இருந்த இரண்டு பேரும் இயற்கை உபாதையை அங்கேயே கழித்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து, மேலாளர் சிவராஜன், காவலர் சிவக்குமார் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த நடவடிக்கையை விழுப்புரம் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் செந்தில்வேலன் எடுத்துள்ளார்.

கோயில்களை பொறுப்பாக கவனித்துக் கொள்ள வேண்டிய அதிகாரிகள், இப்படி நடந்து கொண்ட செயல் பக்தர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.