கட்சி தாவிய எம்.எல்.ஏ.க்கள்.. அதுக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை.. நிதிஷ் குமார் தலைமையில் ஆட்சி தொடரும்.. பா.ஜ.க.

கட்சி தாவிய எம்.எல்.ஏ.க்கள்.. அதுக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை.. நிதிஷ் குமார் தலைமையில் ஆட்சி தொடரும்.. பா.ஜ.க.

அருணாசல பிரதேசத்தில் எம்.எல்.ஏ.க்கள் கட்சி தாவியது பீகார் அரசை பாதிக்காது. முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம் 5 ஆண்டுகள் ஆட்சி புரியும் என்று பா.ஜ.க. மாநிலங்களவை எம்.பி. சுஷில் குமார் மோடி தெரிவித்தார்.

அருணாசல பிரதேசத்தில் ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ.க்கள் 7 பேரில் 6 பேர் பா.ஜ.க.வுக்கு தாவி விட்டனர். இதனால் பீகாரில் ஆட்சி செய்து வரும் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் விரிசல் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மேலும் ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவரும், முதல்வருமான நிதிஷ் குமார் நேற்று முன்தினம் பேட்டி ஒன்றில், நான் முதல்வராக விரும்பவில்லை. பா.ஜ.க. தனது கட்சியை சேர்ந்தவரை முதல்வராக்க முடியும் என்றும் நான் ஏற்கனவே கூறியிருந்தேன் என்று தெரிவித்தார். நிதிஷ் குமாரின் இந்த பேச்சும் பல்வேறு யூகங்களை கிளப்பியது.

கட்சி தாவிய எம்.எல்.ஏ.க்கள்.. அதுக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை.. நிதிஷ் குமார் தலைமையில் ஆட்சி தொடரும்.. பா.ஜ.க.
சுஷில் குமார் மோடி

இந்த சூழ்நிலையில் பா.ஜ.க. மாநிலங்களவை உறுப்பினரும், நிதிஷ் குமாருக்கு மிகவும் நெருக்கமானவருமான சுஷில் குமார் மோடி கூறியதாவது: அருணாசல பிரதேசத்தில் என்ன நடந்ததோ அதனால் பீகார் மற்றும் பீகார் அரசை பாதிக்காது என்று ஐக்கிய ஜனதா தள தலைவர்கள் தெரிவித்தனர். பா.ஜ.க.-ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி உடைக்க முடியாதது. நிதிஷ் குமார் வழிக்காட்டுதலில் இந்த அரசு 5 ஆண்டுகள் செயல்படும்.

கட்சி தாவிய எம்.எல்.ஏ.க்கள்.. அதுக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை.. நிதிஷ் குமார் தலைமையில் ஆட்சி தொடரும்.. பா.ஜ.க.
பா.ஜ.க., ஐக்கிய ஜனதா தளம்

நிதிஷ் குமார் முதலில் முதல்வராக விரும்பவில்லை. ஆனால், உங்களது பெயர் மற்றும் திட்டம் அடிப்படையில் தேர்தலில் போட்டியிட்டோம் என்று அவரிடம் பா.ஜ.க. மற்றும் ஐக்கிய ஜனதா தள தலைவர்கள் கூறினர். இறுதியில் பா.ஜ.க., ஐக்கிய ஜனதா தளம் மற்றும் வி.ஐ.பி. தலைவர்களின் வேண்டுகோளை ஏற்று நிதிஷ் குமார் முதல்வராக பொறுப்பேற்றார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.