மாணவிகளுக்கு மூளைசலவை செய்து சிவசங்கர் பாபாவுக்கு விருந்தாக்கிய சுஷில் ஹரி பள்ளி ஆசிரியை கைது

 

மாணவிகளுக்கு மூளைசலவை செய்து சிவசங்கர் பாபாவுக்கு விருந்தாக்கிய சுஷில் ஹரி பள்ளி ஆசிரியை கைது

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கேளம்பாக்கத்திற்கு அருகே உள்ள தனியார் சர்வதேச உண்டு உறைவிடப் பள்ளி சுஷில் ஹரி பள்ளி. சிவசங்கர் தன்னை கிருஷ்ணரின் அவதாரம் என்றும், வாழும் கடவுள் என்றும் கூறிக்கொண்டு, மக்களுக்கு ஆசி வழங்கி வருவதால் அவரை சிவசங்கர் பாபா என்று அழைக்கின்றனர். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர்மீது அந்த பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவிகள், இவர் பாலியல் தொல்லை அளித்ததாக குற்றம் சாட்டினர்.

மாணவிகளுக்கு மூளைசலவை செய்து சிவசங்கர் பாபாவுக்கு விருந்தாக்கிய சுஷில் ஹரி பள்ளி ஆசிரியை கைது

புகாரை அடிப்படையாக கொண்டு, அந்த தனியார் பள்ளியில் தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தினரும், காவல்துறையினரும் சோதனை நடத்தினர். ஆனால், அப்போது அங்கு சிவசங்கர் பாபா இல்லை என்று பள்ளி நிர்வாகம் சார்பில் கூறப்பட்டது. இதையடுத்து, கடந்த 11-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சிவசங்கர் பாபா, பள்ளியின் தாளாளர், பள்ளியின் தலைமை ஆசிரியர் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் சிவசங்கர் பாபா நேரில் ஆஜராகவில்லை. தலைமறைவாக இருந்த பாபாவை டெல்லி சென்று சிபிசிஐடி போலீசார் பிடித்தனர். தொடர்ந்து அவரை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, 15 நாள் நீதிமன்ற காவலில் சிவசங்கரனை மாவட்ட சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் சிவசங்கர் பாபாவின் பெண் பக்தர்கள் மூன்று பேரை அலுவலகத்திற்கு அழைத்து வந்து சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். சுஷில் ஹரி பள்ளி ஆசிரியை கருணா, பக்தை சுஷ்மிதா மற்றும் நீரஜ் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில் மாணவிகளை மூளை சலவை செய்ததாக பக்தை சுஷ்மிதா கைது செய்யப்பட்டார்.