‘’நான் நல்லா இருக்கேன்..’’- ஆஸ்பிடலில் இருந்து பேசிய கொளஞ்சி! சுடுகாட்டில் கொளஞ்சி சடலத்தை சுற்றி நின்ற உறவினர்கள் அதிர்ச்சி!

‘’நான் நல்லா இருக்கேன்..’’- ஆஸ்பிடலில் இருந்து பேசிய கொளஞ்சி! சுடுகாட்டில் கொளஞ்சி சடலத்தை சுற்றி நின்ற உறவினர்கள் அதிர்ச்சி!

உயிரிழந்தவர்களின் உடலை மாற்றிக்கொடுத்து உறவினர்களை அல்லாட விடும் அரசு மருத்துவமனைகளின் அலட்சியம் தொடர்ந்துகொடுதான் இருக்கிறது.

உடலை மாற்றிக்கொடுத்ததால், புதைத்த உடலை அது எங்களுக்கு சொந்தமான உடல் என்று தோண்டி எடுத்துப்போன சம்பவமும் நடந்திருக்கிறது. பிரேத பரிசோதனை செய்துவிடுவதால் இறுதிச்சடங்கில் முகத்தை கூட திறக்க வழி இல்லாமல் எரித்தபின்னர் உறவினர்கள் தேடி வந்து, அது எங்களுக்கு சொந்தமான சாம்பல் என்று அள்ளிபோனதும் உண்டு.

இதில் ஒரு படி மேலே போய் உயிரோடு இருப்பவர்களை இறந்துவிட்டதாக சொல்லி சடலம் என்று பிரேத பரிசோதனை கிடங்கில் தூக்கிப்போட்டு திடீரென்று விழிந்து அரண்டு போய் எழுந்து வந்த சம்பவங்களும் நடந்திருக்கிறது. அப்படி ஒரு சம்பவம்தான் கள்ளக்குறியிலும் நடந்திருக்கிறது.

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தொட்டியத்தை சேர்ந்த கொளஞ்சி என்பவர், கொரோனா தொற்றின் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

‘’நான் நல்லா இருக்கேன்..’’- ஆஸ்பிடலில் இருந்து பேசிய கொளஞ்சி! சுடுகாட்டில் கொளஞ்சி சடலத்தை சுற்றி நின்ற உறவினர்கள் அதிர்ச்சி!

சிகிச்சையில் இருக்கும் அவர் திடீரென்று இறந்துவிட்டதாக மருத்துவமனை அலுவலர்கள் சொல்லவும், வீட்டில் பந்தல் எல்லாம் போட்டுவிட்டனர். ஆம்புலன்ஸில் வந்த உடலை சுடுகாட்டிற்கும் எரிக்க எடுத்துச்சென்றிருக்கிறார்கள்.

அப்போது, கொளஞ்சியப்பன் வீட்டிற்கு போன் செய்து, ‘’நான் நல்லா இருக்கேன். நீங்க எப்டி இருக்கீங்க?’’என்று நலம் விசாரித்திருக்கிறார். நீங்க எங்க இருக்கீங்க என்று உறவினர்கள் கேட்கவும், ‘’நான் மருத்துவமனையிலதான் இருக்கேன்’’என்று சொல்லவும், அதிர்ந்துபோன உறவினர்கள், சடலத்தின் முகத்திரையை திறந்து பார்க்கவும், அது வேறு ஒருவரின் சடலம் என்று தெரிந்தது.

‘’நான் நல்லா இருக்கேன்..’’- ஆஸ்பிடலில் இருந்து பேசிய கொளஞ்சி! சுடுகாட்டில் கொளஞ்சி சடலத்தை சுற்றி நின்ற உறவினர்கள் அதிர்ச்சி!

திருக்கோவிலூரை சேர்ந்தவர் கள்ளக்குறிச்சிக்கு சிகிசைக்கு வந்த சிறிது நேரத்திலேயே உயிரிழந்துவிட்டார். ஆனால், கொளஞ்சி இறந்துவிட்டதாக அவரது உறவினர்களுக்கு தகவல் சொல்லிவிட்டார்கள் அரசு மருத்துவமனை அலுவலர்கள் என்பது பின்னர் தெரியவந்தது.

அரசு மருத்துவமனைகளின் இந்த அலட்சியப்போக்கு மிகவும் கண்டிக்கத்தகக்து என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

  • கதிரவன்