மகளை காப்பாற்ற உயிரைவிட்ட தாய் – தந்தை என்ன ஆனார் என்றே தெரியவில்லை – கம்பம் சோகம்

 

மகளை காப்பாற்ற உயிரைவிட்ட தாய் – தந்தை என்ன ஆனார் என்றே தெரியவில்லை – கம்பம் சோகம்

தேனி மாவட்டம் கம்பம் பகுதியை சேர்ந்தவர் அபுதாஹீர். இவரது மனைவி ஆமினா. தனியார் ஓட்டலில் வேலை செய்துவரும் அபுதாகிர் குடும்பத்துடன் சுற்றுலா சென்றிருக்கிறார். சுற்றுலா சென்றுவிட்டு திரும்பி வரும் வழியில் குழந்தைகள் விரும்பி கேட்டுக் கொண்டதால் முல்லைப் பெரியாறு ஆற்றில் இறங்கி குளிக்க அனுமதி அளித்துள்ளார்.

மகளை காப்பாற்ற உயிரைவிட்ட தாய் – தந்தை என்ன ஆனார் என்றே தெரியவில்லை – கம்பம் சோகம்

அப்போது 13 வயது மகளை ஆற்றுநீர் இழுத்துச் சென்றுள்ளது. மகளை காப்பாற்ற தாயார் ஆமினா பதறி அடித்துக்கொண்டு தண்ணீரில் இறங்கி இருக்கிறார். அவரையும் தண்ணீர் இழுத்துச்செல்ல, இருவரையும் காப்பாற்ற அபுதாஹீர் தண்ணீரில் வேகமாக இறங்கியிருக்கிறார். அவரையும் தண்ணீர் எடுத்துச் சென்றிருக்கிறது. ஆனாலும் அவர் சுதாரித்துக்கொண்டு, மகளை காப்பாற்றி பத்திரமாக கரை கொண்டு சேர்த்து விட்டு திரும்பியிருக்கிறார்.

அதற்குள் மனைவியை தண்ணீர் வேகமாக இழுத்துசென்றதால், அவரை காப்பாற்ற தண்ணீருக்குள் வேகமாக இறங்கி சென்றிருக்கிறார் அபுதாஹீர். அப்போது எதிர்பாராதவிதமாக கணவன் – மனைவி இருவரும் வேகமாக வந்து தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.

மகளை காப்பாற்ற உயிரைவிட்ட தாய் – தந்தை என்ன ஆனார் என்றே தெரியவில்லை – கம்பம் சோகம்

இதனையடுத்து தகவல் தெரிந்து போலீசாரும், தீயணைப்பு துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்து இருவரையும் தீவிரமாக தேடி வந்தபோது ஆமீனா சடலமாக மீட்கப்பட்டார். அவரது உடல் சின்னமனூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அபுதாஹீர் என்ன ஆனார் என்றே தெரியவில்லை. அவரை காவல்துறையினரும் தீயணைப்பு துறையினரும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சின்னமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகளை காப்பாற்ற தன் உயிரை விட்டுள்ளா தாயார். தந்தை என்ன ஆனார் என்றே தெரியவில்லை என்கிற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.