பார்வை முதல் மூளைத் திறன் வரை… சர்க்கரைவள்ளிக் கிழங்கின் அசத்தல் பலன்கள்!

 

பார்வை முதல் மூளைத் திறன் வரை… சர்க்கரைவள்ளிக் கிழங்கின் அசத்தல் பலன்கள்!

உலகம் முழுவதும் உள்ள மக்களால் விரும்பி சாப்பிடப்படும் உணவுகளுள் ஒன்று சர்க்கரை வள்ளிக்கிழங்கு. இதன் ஆரஞ்சு நிறம், மாவுச்சத்து, ஊட்டச்சத்துக்கள், நார்ச்சத்து என அனைத்தும் உலகம் முழுவதும் அனைத்து தரப்பு மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உணவாக மாற்றியுள்ளது.

சர்க்கரை வள்ளிக்கிழங்கு மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் இருந்து உலகம் முழுவதும் பரவியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக மத்திய அமெரிக்காவைச் சார்ந்தவர்கள் சர்க்கரை வள்ளிக்கிழங்கை விளைவித்து வந்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. இந்தியர்களும் பல ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக இதைப் பயன்படுத்தி வருகின்றனர்.

பார்வை முதல் மூளைத் திறன் வரை… சர்க்கரைவள்ளிக் கிழங்கின் அசத்தல் பலன்கள்!

சர்க்கரைவள்ளிக் கிழங்கில் பீட்டா கரோட்டின் வடிவில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி6, சி, பொட்டாசியம், இரும்பு, கால்சியம், செலீனியம், நார்ச்சத்து, ஆன்டி ஆக்சிடண்ட் நிறைந்துள்ளது.

சர்க்கரைவள்ளிக் கிழங்கில் பீட்டா கரோட்டின் வடிவில் வைட்டமின் ஏ சத்து நிறைவாக உள்ளது. ஆரஞ்சு நிற காய்கறிகள், பழங்கள் ஆரஞ்சு நிறத்தில் இருக்க பீட்டா கரோட்டின்தான் காரணம். இந்த பீட்டா கரோட்டினை நம்முடைய உடல் வைட்டமின் ஏ சத்தாக மாற்றுகிறது. இதன் காரணமாக பார்வைத் திறன் மேம்படுகிறது.

இதில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் செரிமானத்தை ஒழுங்குபடுத்த உதவுகிறது. குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுக்க சர்க்கரைவள்ளிக் கிழங்கை வேகவைத்து கொடுக்கலாம். தில் உள்ள phytosterol என்ற ரசாயனம் செரிமான உறுப்புகள் ஆரோக்கியமாக இருக்கச் செய்கிறது.

சர்க்கரைவள்ளிக் கிழங்கில் அதிக மாவுச்சத்து, சர்க்கரை இருந்தாலும் இதன் கிளைசமிக் இன்டெக்ஸ் மிகக் குறைவு. எனவே, சர்க்கரைவள்ளிக் கிழங்கை சாப்பிடுவதால் நம்முடைய ரத்தத்தில் சர்க்கரை அளவு வேகமாக அதிகரிக்காது. இதில் உள்ள நார்ச்சத்து டைப் 2 சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது.

இதில் உள்ள பீட்டா கரோட்டின் மற்றும் ஆன்டி ஆக்சிடண்ட் பல்வேறு வகையான புற்றுநோய் செல்களுக்கு எதிராக செயல்படுகின்றன.

இதன் நார்ச்சத்து மற்றும் ஆன்டி ஆக்சிடண்ட் இதய நோய் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது. இதில் உள்ள அந்தோசயனின் (anthocyanin) என்ற ரசாயனம் இதய ரத்த நாள நோய்கள் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது.

சர்க்கரைவள்ளிக் கிழங்கு மூளை செயல்திறனை மேம்படுத்துகிறது. இதில் உள்ள அந்தோசயனின் இதற்கான முக்கிய காரணம். இது மூளை செல்கள் வீக்கம் அடைவதைத் தடுத்து, செல்கள் செயல் இழப்பைக் குறைக்க உதவுகிறது.

நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க, சருமத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்க சர்க்கரை வள்ளிக்கிழங்கு பெரிதும் உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.