கொசுறாக வாங்கும் கொத்தமல்லியில் இவ்வளவு நன்மைகளா!!!

 

கொசுறாக வாங்கும் கொத்தமல்லியில் இவ்வளவு நன்மைகளா!!!

காய்கறி வாங்கிவிட்டு கடைசியில் இலவசமாக கறிவேப்பிலை கொத்தமல்லி வாங்கிவிட்டு வருவோம். விலை ஏறினாலும் கடைக்காரரும் அதை கொசுறாகவே கொடுத்து அனுப்புவார். கொத்தமல்லி இல்லாமல் ரசம், சாம்பார் எதுவும் இல்லை என்று சொல்லலாம். இருப்பினும் கொத்தமல்லியின் பூர்வீகம் இந்தியா இல்லை என்றும், அது வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது என்றும் சொல்கிறார்கள். 5000ம் ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கத்தில் கொத்தமல்லி பயன்பாடு இருந்துள்ளதாக ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

கொசுறாக வாங்கும் கொத்தமல்லியில் இவ்வளவு நன்மைகளா!!!

கொத்தமல்லியில் வைட்டமின் ஏ, சி அதிக அளவில் உள்ளது. இதனுடன் 11 அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் இதில் உள்ளது. 100 கிராம் கொத்தமல்லியில் 31 கலோரி உள்ளது. 2 கிராம் கார்போஹைட்ரேட், நான்கு கிராம் புரதச்சத்து, 0.7 கிராம் கொழுப்பு, 146 மை.கி கால்சியம், 5.3 மை.கி இரும்புச்சத்து, 4.7 கிராம் புரதச்சத்து உள்ளது.

100 கிராம் கொத்தமல்லியில் 635 மை.கி அளவுக்கு வைட்டமின் ஏ உள்ளது. இது பார்வைத் திறன் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. வைட்டமின் ஏ, சி, இ ஆகியவை இணைந்து பார்வைத் திறனை மேம்படுத்துகின்றன. தொடர்ந்து உணவில் கொத்தமல்லியைச் சாப்பிட்டு வருபவர்களுக்கு வயோதிகம் காரணமாக கண்களில் ஏற்படும் பிரச்னைகள் தாமதம் ஆகும், குறையும்.

இதில் வைட்டமின் சி, இ அதிக அளவில் உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கத் துணை செய்கிறது. வைட்டமின் சி ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள் செயல்பாட்டை மேம்படுத்துவதுடன் இரும்புச் சத்து கிரகிக்க உதவுகிறது.

இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடண்ட் மற்றும் என்சைம்கள் இன்சுலின் சுரப்பைத் தூண்டி ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைய உதவி செய்கிறது. சாப்பிட்டதற்கு பிறகு கொத்தமல்லி ஜூஸ் அருந்தி வந்தால் சர்க்கரை அளவு குறையும். உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும்.

மேலும், இது உடலில் கெட்ட கொழுப்பு அளவைக் குறைத்து, நல்ல கொழுப்பு அளவை அதிகரிக்கச் செய்கிறது. இதனால், இதய நோய் வருவதற்கான வாய்ப்பு குறைகிறது.

இதில் கால்சியம் அதிகமாக உள்ளதால் எலும்புகள் உறுதியாகவும் அடர்த்தியாகவும் இருக்கத் துணை செய்கிறது. மேலும் இதில் உள்ள நுண் ஊட்டச்சத்துக்கள் எலும்புகளில் ஏற்படும் வீக்கம் தொடர்பான பிரச்னைகளைத் தவிர்த்து ஆர்த்ரைடிஸ் பிரச்னைக்கான வாய்ப்பைக் குறைக்கிறது.

வைட்டமின் சி, ஏ உள்ளதால் சருமத்தின் ஆரோக்கியத்தையும் அதிகரிக்க செய்கிறது. சருமம் பொலிவாக மாற்றுகிறது. எண்ணெய் பிசுக்கு சருமம் உள்ளவர்கள் இதை எடுத்து வந்தால் சீபம் எண்ணெய் சுரப்பு கட்டுப்படும்.