Home சினிமா ’சிங்கபெண்ணே’ கேக்… கேரளா மேள கச்சேரி… ரம்யா பாண்டியனுக்கு சர்ப்பரைஸ் வெல்கம்!

’சிங்கபெண்ணே’ கேக்… கேரளா மேள கச்சேரி… ரம்யா பாண்டியனுக்கு சர்ப்பரைஸ் வெல்கம்!

பிக்பாஸ் சீசன் 4 வெற்றிகரமாக முடிவடைந்து விட்டது. கொரோனா அச்சுருத்தல் தாண்டி, எவ்வித சிக்கலும் இல்லாமல் இறுதி நாள் சென்ற ஞாயிறன்று நடந்தது. ஆறு மணி நேர ஒளிபரப்பாக அது அமைந்தது.

இந்த சீசனில் ரம்யா பாண்டியன், ரியோ, கேபிரியல்லா, பாலாஜி, ஆரி, ஷிவானி, நிஷா, அர்ச்சனா, விஜே சுசித்ரா, ஆஜித், ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி, சம்யுக்தா, சோம சுந்தரம், அனிதா சம்பத், ஷனம் ஷெட்டி, ஜித்தன் ரமேஷ் ஆகியோர் போட்டியிட்டனர்.

இறுதியாக ஆரி, ரம்யா, சோம், பாலா, ரியோ ஆகியோர் இருந்தனர். இதில் ஆரி டைட்டில் வின்னரானார். பாலா இரண்டாம் இடம், ரியோ மூன்றாம் இடம், ரம்யா நான்காம் இடம், சோம் ஐந்தாம் இடம் என இடம் பிடித்தனர்.

ரம்யாதான் டைட்டில் வின்னர் என்ற நிலை தொடக்கத்தில் இருந்தது. ஆனால், ஆரிக்கு என்று தனி ஆர்மி உருவாகி சோஷியல் மீடியாவை ரனகளமாக்கினர். ஆரியுடன் ரம்யா வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் ரம்யாவுக்கு எதிராக களம் இறங்கியது ஆரி ஆர்மி. அதனால், ரம்யாவுக்கு இரண்டாம் இடம் கூட கிடைக்க வில்லை.

ஆனாலும், எப்போதும் சிரித்துக்கொண்டே எல்லாவற்றையும் ஏற்பது ரம்யாவின் இயல்பு என்பதால், நான்காம் இடம் என்பதையும் அவர் சிரித்துக்கொண்டே ஏற்றுக்கொண்டார். இறுதிப் போட்டி முடிந்து வீட்டுக்குச் சென்ற ரம்யா பாண்டியனுக்கு சர்ப்பரைஸ் வெல்கம் காத்திருந்தது.

கேரளாவில் பெரும் விழாக்களுக்கு கொட்டப்படும் செண்டை மேளம் முழங்கி அவர் தெருவில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பலரும் ரம்யாவுக்கு நேரில் வந்து வாழ்த்துச் சொல்லி, அணைத்து அன்பை வெளிப்படுத்தினர். ரம்யாவும் அவர்களோடு சேர்ந்து டான்ஸ் ஆடி வரவேற்பை ஏற்றுக்கொண்டார். மாலை அணிவித்து, ஆரத்தி எடுத்தார் ரம்யாவின் அம்மா. வீட்டுக்குள் சென்றவருக்கு இன்னொரு சர்ப்பரைஸ் காத்திருந்தது.

இறுதிப் போட்டிக்காக பிக்பாஸ் வீட்டில் ஒரு போட்டி நடந்தது. கயிற்றைப் பிடித்துக்கொண்டு நீண்ட நேரம் நிற்க வேண்டும். அதில் ரம்யாவும் ஷிவானியும் ஐந்து மணி நேரத்திற்கு மேலாக போட்டிப்போட்டனர். அப்போது பிக்பாஸ் சிங்கப்பெண்ணே பாடலை ஒலிக்க விட்டார். அப்போது இருவரும் தங்களை அறியாமல் அழுதனர். அதை நினைவூட்டும் விதத்தில் ‘சிங்கப்பெண்’ விருது கொடுத்து பிக்பாஸ் குழு ரம்யாவை கெளரவித்தது.

வீட்டுக்குள் நுழைந்த ரம்யாவுக்கு ‘சிங்கப்பெண்ணே’ என்று எழுதப்பட்ட கேக் தயாராக இருந்தது. அதை ரம்யா வெட்டி உற்சாகத்துடன் தனது வெற்றியைக் கொண்டாடினார்.

மாவட்ட செய்திகள்

Most Popular

வாக்கு சீட்டில் புகைப்படம் இருக்காது: தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு

தமிழகத்தில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. விருப்பமனு விநியோகம் நிறைந்து வேட்பாளர்களுக்கான...

மின்சாரம் தாக்கி பனியன் கம்பெனி ஊழியர் பலி!

ஈரோடு ஈரோடு அருகே கிரக பிரவேசத்திற்கு மா இலை பறிக்க சென்றபோது மின்சாரம் தாக்கி, பனியன் கம்பெனி தொழிலாளி உயிரிழந்தார். ஈரோடு...

பாலியல் புகாருக்கு ஆளான சிறப்பு டி.ஜி.பி.யை சஸ்பெண்ட் செய்ய ஐபிஎஸ் அதிகாரிகள் கோரிக்கை

முதல்வர் பழனிசாமியின் பரப்புரைக்கு அவரது பாதுகாப்புக்காக சென்னையில் இருந்து சிறப்பு டிஜிபி சென்றிருந்த நிலையில், அவருடன் பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் பலரும் சென்றிருந்தனர். பாதுகாப்பு பணியை முடித்துவிட்டு சென்னை திரும்பும்...

’’ஓசிமணி’’- வறுத்தெடுக்கும் பாஜக

முதலில் வதந்தியை கிளப்பி விட்டு ஊசி ஓசி என்றவுடன் சத்தமில்லாமல் போட்டுச் செல்லும் தமிழகத்தின் ஓசி மணி என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியை சாடியிருக்கிறார் பாஜக தகவல் தொழில்நுட்ப...
TopTamilNews