சூர்யாவின் 40 ஆவது பட அப்டேட் அதிகாரப்பூர்வமாக வெளியானது!

 

சூர்யாவின் 40 ஆவது பட அப்டேட் அதிகாரப்பூர்வமாக வெளியானது!

சூர்யாவின் 40வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சூர்யா – சுதா கொங்கரா கூட்டணியில் உருவாகியுள்ள ‘சூரரைப்போற்று’ திரைப்படம் விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியாக உள்ளது.

சூர்யாவின் 40 ஆவது பட அப்டேட் அதிகாரப்பூர்வமாக வெளியானது!

இந்த திரைப்படத்தை அடுத்து, வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ படத்தில் நடிக்க சூர்யா ஒப்பந்தம் செய்துள்ளார். இந்நிலையில் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் சூர்யாவுக்கு 40வது படமாகும். ‘பசங்க 2’ படத்துக்குப் பின்னர் தற்போது பாண்டிராஜ் – சூர்யா கூட்டணி இணைந்துள்ளது.

இதுகுறித்து இயக்குநர் பாண்டிராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், “இருக்கு ஒரு தரமான சம்பவம்” எனக் குறிப்பிட்டுள்ளார். படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.