”சர்ஃபேஸ் ஸ்விப்ட் என்ற சிறிய லேப்டாப்” –அறிமுகப்படுத்த மைக்ரோசாப்ட் திட்டம் !!

”சர்ஃபேஸ் ஸ்விப்ட் என்ற சிறிய லேப்டாப்” –அறிமுகப்படுத்த மைக்ரோசாப்ட் திட்டம் !!

கணிணி உலகின் ஜாம்பவானாக கருதப்படும் மைக்ரோசாப்ட் நிறுவனம், சர்ஃபேஸ் ஸ்விப்ட்’ என்ற புதிய சிறிய லேப்டாப்பை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

”சர்ஃபேஸ் ஸ்விப்ட் என்ற சிறிய லேப்டாப்” –அறிமுகப்படுத்த மைக்ரோசாப்ட் திட்டம் !!

இது குறித்து மைக்ரோசாப்ட் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும் இந்த லேப்டாப் குறித்த தகவல்கள் தொடர்ந்து கசிந்த வண்ணம் உள்ளன. இந்த புதிய லேப்டாப், 12.5 இன்ச் திரை கொண்ட சிறிய மடிகணிணியாக இருக்கும் என தெரியவந்துள்ளது. மேலும் இன்டெல் 10 ஜெனரெஷன் கோர் ஐ5 ஐஸ் லேக் பிராசசர், 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் உள்பட பல்வேறு சிறப்பம்சங்களுடன் இந்த லேப்டாப் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

”சர்ஃபேஸ் ஸ்விப்ட் என்ற சிறிய லேப்டாப்” –அறிமுகப்படுத்த மைக்ரோசாப்ட் திட்டம் !!

மேலும் அமெரிக்காவில் இந்த புதிய லேப்டாப் வரும் அக்டோபரில் அறிமுகப்படுத்தப்படும் என்றும், தொடர்ந்து டிசம்பர் அல்லது அடுத்த ஆண்டு ஜனவரியில் சர்வதேச அளவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. இதன் விலை இந்திய மதிப்பில் 45 ஆயிரம் ரூபாய் வரை இருக்கும் என தெரியவந்துள்ளது.

”சர்ஃபேஸ் ஸ்விப்ட் என்ற சிறிய லேப்டாப்” –அறிமுகப்படுத்த மைக்ரோசாப்ட் திட்டம் !!
  • எஸ்.முத்துக்குமார்