ராமர் கோயில் பூமி பூஜைக்கு 22 கிலோ வெள்ளி செங்கல்… அடிக்கல் நாட்டுவதற்கான நல்ல நேரம் 12:15:15

ராமர் கோயில் பூமி பூஜைக்கு 22 கிலோ வெள்ளி செங்கல்… அடிக்கல் நாட்டுவதற்கான நல்ல நேரம் 12:15:15

100 கோடி இந்துக்களின் நீண்ட நாள் ஆசையான அயோத்தியில் ராமர் கோயில் இன்னும் சில ஆண்டுகளில் நனவாக உள்ளது. ஆகஸ்ட் 5ம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிகள் தொடங்குவதற்கான பூமி பூஜை நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி ராமர் கோயிலுக்கான அடிக்கல்லை நாட்டுகிறார். பூமி பூஜை மிகவும் சிறப்பாக நடத்துவதற்காக ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று கொண்டு இருக்கிறது.

ராமர் கோயில் பூமி பூஜைக்கு 22 கிலோ வெள்ளி செங்கல்… அடிக்கல் நாட்டுவதற்கான நல்ல நேரம் 12:15:15

பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் சுரேஷ் நகுவா தனது டிவிட்டரில், ராமர் கோயில் கட்டுமான பணிகள் தொடங்குவதற்கான பூமி பூஜையின் போது பயன்படுத்தப்பட உள்ள 22 கிலோ எடையுள்ள வெள்ளியாலான செங்கல்லின் 2 படத்தை வெளியிட்டு இருந்தார். அந்த வெள்ளி செங்கலின் மீது, (அடிக்கல் நாட்டுபவர்) பிரதமர் ஸ்ரீ நரேந்திர தாமோதர் தாஸ் மோடி ஜி.. ஜெய் ஸ்ரீ ராம்.. 2020 ஆகஸ்ட் 5 அன்று 12:15:15 மணிக்கு என எழுதப்பட்டுள்ளது. அந்த வெள்ளி செங்கலின் எடை 22.600 கிலோ என தகவல்.

ராமர் கோயில் பூமி பூஜைக்கு 22 கிலோ வெள்ளி செங்கல்… அடிக்கல் நாட்டுவதற்கான நல்ல நேரம் 12:15:15

கடைசி முகலாய பேரரசர் பகதூர் ஷா ஜாபரின் ஆறாவத தலைமுறை வம்சாவளியான யாகுப் ஹபீபுதீன் டூசி, ராமர் கோயில் கட்டுமான பணிக்காக தங்கத்தால் ஆன 1 கிலோ எடையுள்ள செங்கல்லை வழங்குவதாக முன்பு வாக்குறுதி கொடுத்து இருந்தார். தற்போது ராமர் கோயிலுக்கான கட்டுமான பணிகள் தொடங்க உள்ள சூழ்நிலையில், வாக்குறுதி கொடுத்தப்படி தன்னிடம் 1 கிலோ எடையுள்ள தங்க செங்கல் தயாராக உள்ளதாகவும், பிரதமர் மோடியை தனிப்பட்ட முறையில் சந்தித்து தங்க செங்கலை ஒப்படைக்க உள்ளதாகவும் அதற்காக நேரம் கேட்டுள்ளதாகவும் யாகுப் ஹபீபுதீன் டூசி தெரிவித்துள்ளார்.