கடன் வாங்கியவர்களுக்கு சிக்கல் – கையை விரித்த உச்ச நீதிமன்றம்!

 

கடன் வாங்கியவர்களுக்கு சிக்கல் – கையை விரித்த உச்ச நீதிமன்றம்!

கொரோனா பரவலின் முதல் அலையின்போதே முழு ஊரடங்கு போடப்பட்டதால் பொருளாதாரம் பெரும் சரிவைச் சந்தித்தது. மக்களிடையே பணப்புழக்கம் மிகவும் குறைந்தது. ஏற்கெனவே சேமித்து வைத்த பணத்தையே செலவளித்தனர். தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஓரளவு பொருளாதாரத்தை ஈட்டினார்கள். தற்போது மீண்டும் ஒரு ஊரடங்கு என்பது மக்களின் அடிமடியிலேயே கைவைக்கும் வகையில் பேராபத்தை விளைவித்துள்ளது. மக்களிடம் பணப்புழக்கம் இல்லாவிட்டால் தன்னிச்சையாகவே பொருளாதாரமும் சரிவை நோக்கிச் சென்றுவிடும்.

கடன் வாங்கியவர்களுக்கு சிக்கல் – கையை விரித்த உச்ச நீதிமன்றம்!
கடன் வாங்கியவர்களுக்கு சிக்கல் – கையை விரித்த உச்ச நீதிமன்றம்!

அதிலும் குறிப்பாக வங்கிகளில் கடன் வாங்கி தொழில் தொடங்கியவர்கள், வாகனங்கள் வாங்கியவர்கள், வீட்டுக்கடன் வாங்கியவர்கள் என அனைவருக்கும் மிக மிக நெருக்கடியான சூழல் எழுந்திருக்கிறது. மீண்டும் வருமானத்தை இழக்கும் பட்சத்தில் கடனுக்கான மாதாந்திர தவணை (EMI) கட்டுவதில் பெரும் சிரமம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இது வாடிக்கையாளர்களுக்கு மட்டுமல்ல கடன் கொடுத்த வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்குக் பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

கடன் வாங்கியவர்களுக்கு சிக்கல் – கையை விரித்த உச்ச நீதிமன்றம்!

2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் மத்திய அரசு இந்தியா முழுவதும் முழு ஊரடங்கை அறிவித்தது. இதனால் பலர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டது. பலரது வருமானமும் பாதிக்கப்பட்டது. வருமானம் இல்லாததால் கடன் வாங்கியவர்கள் ஈஎம்ஐ கட்டுவதற்கு மார்ச், ஏப்ரல், மே ஆகிய மூன்று மாதங்களுக்கு ரிசர்வ் வங்கி விலக்கு அளித்தது (மொரட்டோரியம்). மே மாதத்தைத் தாண்டியும் ஊரடங்கு தொடர்ந்ததால் ஜூன், ஜூலை, ஆகஸ்டு என அடுத்த மூன்று மாதங்களுக்கும் விலக்கு அளித்தது.

தற்போது கொரோனா இரண்டாம் அலை நீடிப்பதால் மீண்டும் மொரட்டோரியம் வழங்க உத்தரவிட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிமன்றம், மொரட்டோரியத்தை அறிவிக்க ரிசர்வ் வங்கிக்கு உத்தரவிட முடியாது என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்தது. இது மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் கலந்து பேசி எடுக்க வேண்டிய கொள்கை முடிவு. அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறியிருக்கிறது. உச்ச நீதிமன்றமும் கையை விரித்ததால் கடன் வாங்கியவர்களுக்கு சிக்கல் எழுந்துள்ளது.