சாத்தான்குளம் கொலை வழக்கு… யாருக்கும் ஜாமின் கிடையாது – அதிரடி காட்டிய சுப்ரீம் கோர்ட்!

 

சாத்தான்குளம் கொலை வழக்கு… யாருக்கும் ஜாமின் கிடையாது – அதிரடி காட்டிய சுப்ரீம் கோர்ட்!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த செல்போன் கடை உரிமையாளர்களான ஜெயராஜ், பென்னிக்ஸ் சிறை மரணம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று சாத்தான்குளம் போலீசாரால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கடுமையாகத் தாக்கப்பட்டு இருவரும் உயிரிழந்தனர். இச்சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையே உலுக்கியது. இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணை செய்தது. அதன்பின் சிபிஐக்கு மாற்றப்பட்டது. விசாரணையின் முடிவில் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 9 போலீசார் சம்பந்தப்பட்டது தெரியவந்தது.

சாத்தான்குளம் கொலை வழக்கு… யாருக்கும் ஜாமின் கிடையாது – அதிரடி காட்டிய சுப்ரீம் கோர்ட்!

இதனிடையே ஸ்ரீதர் தனக்கு ஜாமின் வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது. இச்சூழலில் இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஸ்ரீதர் மேல்முறையீடு செய்திருக்கிறார். அந்த மனுவில், “இந்த வழக்கை பொறுத்தவரை நான் தப்பிச்சென்று சாட்சியங்கள் ஆதாரங்களைக் கலைக்கும் பேச்சுக்கே இடமில்லை. ப.சிதம்பரத்திற்கு எதிரான அமலாக்கத் துறை வழக்கில் ஜாமின் வழங்குவதற்கான நெறிமுறைகளை உச்ச நீதிமன்றம் வகுத்துள்ளது.

சாத்தான்குளம் கொலை வழக்கு… யாருக்கும் ஜாமின் கிடையாது – அதிரடி காட்டிய சுப்ரீம் கோர்ட்!

அதைக் கருத்தில் கொள்ளாமல் மதுரைக் கிளை என்னுடைய ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. எனவே அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என்று கோரப்பட்டிருந்தது. இதனிடையே மற்றொரு காவலர் ரகு கணேஷூம் மேல் முறையீடு செய்தார். இந்த மனுக்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வினீத் சரண், தினேஷ் மகேஸ்வரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இருவருக்கும் ஜாமின் வழங்க மறுத்த நீதிபதிகள், உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் தாங்கள் தலையிட முடியாது எனக்கூறி வழக்கை முடித்துவைத்தனர்.