‘மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு தடை’ – உச்சநீதிமன்றம் அதிரடி!

 

‘மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு தடை’ – உச்சநீதிமன்றம் அதிரடி!

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

விவசாயிகளின் நலுனுக்காக 3 புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்தது. அதில், ஒரு விஷயம் கூட விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இல்லை என்று கூறிய எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனத்தை முன்வைத்தன. இதனை எதிர்த்து நாடெங்கிலும் போராட்டம் நடந்தப்பட்டும், மத்திய அரசு இதனை திரும்பப்பெறுவதாக இல்லை.

‘மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு தடை’ – உச்சநீதிமன்றம் அதிரடி!

இந்த சூழலில் தான், வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் அதிரடியாக களமிறங்கினர். டெல்லியின் புராரி மைதானத்தில் முகாமிட்ட வட மாநில விவசாயிகள், கிட்டத்தட்ட 45 நாட்களுக்கு மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளின் இந்த போராட்டமே, வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு நன்மை பயக்குமா? என்பதை தெளிவுப் படுத்துகிறது. இந்த நிலையில், வேளாண் சட்டங்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

‘மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு தடை’ – உச்சநீதிமன்றம் அதிரடி!

அப்போது, வேளாண் சட்டங்களை அமல்படுத்த இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். மறு அறிவிப்பு வரும் வரை இந்த தடை தொடரும் என்றும் அறிவித்தனர். மேலும், விவசாயிகளின் பிரச்னையை தீர்க்க ஹெச்.எஸ்.மான், பிரமோத் குமார் ஜோஷி, அசோக் குலாட்டி, அனில் தன்வந்த் ஆகிய 4 பேர் கொண்ட குழுவை அமைத்து ஆணை பிறப்பித்த நீதிபதிகள், விவசாயிகள் போராட்டத்துக்கு தீர்வுகாணவும், வேளாண் சட்டங்களை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கவும் குழு அமைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தனர்.

இந்த வழக்கு நேற்று விசாரிக்கப்பட்ட போது, வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்க முடியுமா? என நீதிபதிகள் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்திருந்தது நினைவு கூரத்தக்கது.