பத்மநாப சுவாமி திருக்கோயிலில் திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்துக்கு உரிமை இருக்கிறது: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

பத்மநாப சுவாமி திருக்கோயிலில்  திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்துக்கு உரிமை இருக்கிறது: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

பத்மநாப சுவாமி திருக்கோயில்:

கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தில் சிறப்பு வாய்ந்த பத்மநாப சுவாமி திருக்கோயில் இருக்கிறது. அந்த கோவிலின் நிர்வாகத்தை திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் நிர்வகித்து வந்தனர். இக்கோயிலின் ரகசிய அறைகளில் இருந்த தங்கம், வைரம் போன்ற விலைமதிப்புயர்ந்த பொருட்கள் கண்டேடுக்கப்பட்டதால் உலக அளவில் அதிக கவனத்தை ஈர்த்த நிலையில், கேரள அரசு கோவில் நிர்வாகத்தை எடுத்து நடத்த வேண்டும் என்று கடந்த 2011 ஆம் ஆண்டு கேரளா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

பத்மநாப சுவாமி திருக்கோயிலில்  திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்துக்கு உரிமை இருக்கிறது: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

மேல்முறையீடு:

பல ஆண்டு காலமாக திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் இந்த கோயிலை நிர்வகித்து வந்ததால், கேரள உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மன்னர் குடும்பத்தினர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அதனை விசாரித்த நீதிபதிகள், கேரள உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். இதனைத்தொடர்ந்து, இது தொடர்பான விசாரணை நடந்து நடந்து வந்த நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

பத்மநாப சுவாமி திருக்கோயிலில்  திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்துக்கு உரிமை இருக்கிறது: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

உச்சநீதிமன்ற தீர்ப்பு:

இந்த வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில், திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலின் சொத்துகள், கோயில் நிர்வாகத்தில் மன்னர் குடும்பத்துக்கு உரிமை உள்ளது என்றும் கோயில் நிர்வாகத்தை மேற்பார்வையிட திருவனந்தபுரம் மாவட்ட நீதிபதி தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழுவை அமைக்க வேண்டும் என்றும் அந்த குழுவில் இடம்பெறும் எல்லாரும் இந்துக்களாக இருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.